தன்மார்பந் தண்டந் தருமாரத் தாள்மார்பு
65 நின்மார்பு மோரொத்த நீர்மையகொ லென்னாமுன்
தேடினாள் ஏசச் சிலமகளிர் மற்றதற்
கூடினார் வையை யகத்து;
சிந்திக்கத் தீரும் பிணியாட் செறேற்க
மைந்துற்றாய் வெஞ்சொன் மடமயிற் சாயலை
70 வந்திக்க வாரென மனத்தக்க நோயிது
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு
போற்றாய்காண் அன்னை புரையோய் புரையின்று
மாற்றாளை மாற்றாள் வரவு;
அ. . . . .. . . . சொல் நல்லவை நாணாமற்
75 றந்து முழவின் வருவாய்நீ வாய்வாளா
எந்தை எனக்கீத்த இடுவளை ஆரப்பூண்
வந்தவழி நின்பான் மாயக் களவன்றேல்
தந்தானைத் தந்தே தருக்கு;
மாலை யணிய விலைதந்தான் மாதர்நின்
80 கால சிலம்பு கழற்றுவான் சால
அதிரலங் கண்ணிநீ அன்பனெற் கன்பன்
கதுவாய் அவன்கள்வன் கள்விநா னல்லேன்
எனவாங்கு
வச்சிய மானே மறலினை மாற்றுமக்கு
85 நச்சினார் ஈபவை நாடறிய நும்மவே
சேக்கை இனியார்பாற் செல்வான் மனையாளாற்
காக்கை கடிந்தொழுகல் கூடுமோ கூடா
தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
இகழினுங் கேள்வரை யேத்தி இறைஞ்சுவார்
90 நிகழ்வ தறியாது நில்லுநீ நல்லாய்
மகளிரை மைந்துற் றமர்புற்ற மைந்தர்
அகலங் கடிகுவே மென்பவை யார்க்கானும்
முடிபொரு ளன்று முனியல் முனியல்
கடவரை நிற்குமோ காமங் கொடியியலாய்
95 எனவாங்கு
இன்ன துனியும் புலவியு மேற்பிக்கும்
தென்னவன் வையைச் சிறப்பு;
|
|