முரசதிர் பவைபோன் முழங்கிடி பயிற்றி
5 ஒடுங்கார் உடன்றவன் தானை வில்விசை
விடுங்கணை யொப்பிற் கதழுறை சிதறூஉக்
கண்ணொளி எஃகிற் கடிய மின்னியவன்
வண்மைபோல் வானம் பொழிநீர் மண்மிசை
ஆனாது வந்து தொகுபீண்டி மற்றவன்
10 தானையி னூழி. . . . . தாவூக் கத்திற்
போன நிலமெல்லாம் போரார் வயல்புகுத
. . . . . . . நீக்கி பபு. . . . .. . . . . .
கான மலைத்தரை கொன்று மணல பினறி
வான மலைத்த . . . . . .வ. . . . . . . .
15 .. .லைத்தவ மணமுர செறிதரத்
தானைத் தலைத்தலை வந்துமைந் துற்றுப்
பொறிவி யாற்றுறி துவர்புகை சாந்தம்
எறிவன எக்குவ வீரணிக் கேற்ற
நறவணி பூந்துகி னன்பல வேந்திப்
20 பிறதொழின...ம் பின்பின் தொடரச்
செறிவினைப் பொலிந்த செம்பூங் கண்ணியர்
ஈரமை வெட்சி யிதழ்புனை கோதையர்
தாரார் முடியர் தகைகெழு மார்பினர்
மாவுங் களிறு மணியணி வேசரி
25 காவு நிறையக் கரைநெரி பீண்டி
வேலாற்று மொய்ம்பனின் விரைமலர் அம்பினோன்
போலாற்று முன்பிற புனைகழன் மைந்தரொடு
தாரணி மைந்தர் தவப்பயன் சான்மெனக்
காரணி கூந்தல் கயற்கட் கவிரிதழ்
30 வாரணி கொம்மை வகையமை மேகலை
ஏரணி இலங்கெயிற் றின்னகை யவர்
சீரணி வையைக் கணிகொல்லோ வையைதன்
நீரணி நீத்தம் இவர்க்கணி கொல்லெனத்
தேருநர் தேருங்காற் றேர்தற் கரிதுகாண்
35 தீரமும் வையையுஞ் சேர்கின்ற கண்கவின்
மண்கணை முழவின் இன்கண் இமிழ்விற்
கெதிர்வ பொருவி. . . . . . . .மேறுமா றிமிழ்ப்பக்
|
|