மூன்றாம் பாடல்
------
வையை
பொருட் சுருக்கம்
அந்தணர் வேதங்களைக் கற்று ஒழுகாநிற்ப
. . . . . . . . . . . . . . . . . . . . .
வையை மகளே! நெருங்கிய நம் நட்பு இம்மையிற்போன்று மறுமையினும்
பொருந்துவதாக.
அறவோர் உள்ளார் அருமறை காப்ப
. . . . . . . . . . . . . . . . . . . . . .
செறுநர் விழையாச் செறிந்தநங் கேண்மை
மறுமுறை யானும் இயைக நெறிமாண்ட
தண்வரல் வையை எமக்கு.
உரை
(இ-ள்.) அறவோர் உள்ளார் - மதுரையின்கண் உள்ள
பார்ப்பனர்
, அருமறை காப்ப - உணர்தற்கரிய வேதங்களை உணர்ந்து அவை
கூறிய ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து ஒழுகா நிற்ப,
நெறி மாண்ட தண் வரல் வையை - ஒழுக்கத்தானே!
மாட்சிமைப்பட்ட குளிர்ந்த நீர் வருகையினையுடைய வையை மகளே!,
செறுநர் விழையா - நம் பகைவரும் விரும்புதற்குக் காரணமான, செறிந்த
கேண்மை - தமது நெருக்கமுடைய நட்பு, மறுமுறையானும் எமக்கு
இயைக - எம்முடைய மறு பிறப்பினும் இயைவதாக.
(வி-ம்.) இப் பாடல் அறவோர் உள்ளார் என்னும்
தலைப்புடையதொரு பரிபாடலின் உறுப்பு என்று தோன்றுகின்றது.
அறவோர் - பார்ப்பனர். 'அந்தணர் என்போர் அறவோர்'
என்றார் திருவள்ளுவனாரும். வேதம் உணர்தற்கரியனவாதல் பற்றி
அருமறை எனப்பட்டன. அவை, தைத்திரியமும் பௌடிகமும்
தலவகாரமும் சாம வேதமுமாம். இனி இருக்கும் எசுவும் சாமமும்
அதர்வணமும் எனினுமாம். காப்ப என்றது கற்றபின் அதற்குத் தக
நின்று ஒழுக என்றவாறு.
மறுமுறை - மறு பிறப்பு. செறுநர் - பகைவர். அவர்
வையையுடன் கேண்மை கோடல் எமக்கும் வாய்வதாமோ என
ஏங்குதற்குக் காரணமான நட்பு என்றவாறு.
இவ் வுறுப்பு, தொல்., செய், 121 ஆம் சூத்திர
மேற்கோளாகப் பேராசிரியத்தினும் நச்சினார்க்கினியத்தினும் காணப்பட்டது.
|
|
|
|