பக்கம் எண் :

பரிபாடல்- மதுரை414

பதினொராம் பாடல்
-------

மதுரை


பொருட் சுருக்கம்

     வழங்கும் வள்ளன்மையுடையாரைப் புகழ்ந்தும், தம்பால் வரும்
இரவலரைக் கண்டு மகிழ்ந்தும் வாழும் சான்றோர் வாழும் மதுரையும்
திருப்பரங்குன்றமுமாகிய இரண்டிடத்தும் வாழும் பேறுடையாரே
வீடுபேற்றினையும் எய்தும் சிறப்புடையோர். ஏனையிடத்து வாழ்வோர்
அச்சிறப்பிலரே யாவர்.

ஈவாரைக் கொண்டாடி யேற்பாரைப் பார்த்துவக்கும்
சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றும்
வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார் மற்றையார்
போவார்ஆர் புத்தேள் உலகு.
உரை

      (இ-ள்.) ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரைப் பார்த்து உவக்கும் -
வறியோர்க்கு அவர் வேண்டுவவற்றை வழங்கும் வள்ளன்மையுடையாரைப்
பெரிதும் கொண்டாடித் தம்பால் வரும் இரவலரைக் கண்டு பெரிதும்
மகிழாநின்ற மேன்மக்கள் வாழாநின்ற, சேய் மாடக் கூடலும் -
பாண்டியனுடைய நான்மாடக் கூடலின் கண்ணும், செவ்வேள் பரங்
குன்றும் - முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பரங்குன்றத்தின்
கண்ணும், வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார் - இருந்து வாழும்
பேறுடையாரே பயன் கெழும் வாழ்பவர் என்று சான்றோராற்
புகழப்படுபவர் ஆவர், மற்றையார் புத்தேள் உலகு போவார் யார்
- அவ் விரண்டிடத்தினும் அன்றி வேறிடத்திருந்து வாழும் ஏனையோருள்
வைத்துப் பயன்பட வாழ்ந்து வீட்டுலகினை எய்துவார் யாரே உளர்?

      (வி-ம்.) ஈவார் - வள்ளன்மையுடையோர். ஏற்பார் - இரவலர்.
சேய் - பாண்டியன்: உவம ஆகுபெயர்; முருகனை ஒத்தவன் என்பது
கருத்து. செவ்வேள் - முருகப் பெருமாள். வாழ்வார் - வாழும்
பேறுடையார். வாழ்வார் - பயன்பட வாழ்பவர். எனப்படுவார் - என்று
சான்றோரானே புகழப்படுபவர். மற்றையார் - அவ்விடங்களில் வாழும்
பேறிலாத ஏனையோர், ஏனையோருள் வைத்து யாரொரு