இருக்கைக்கு அணித்தாக இருக்கவேயும்,
அம்பியில் தாழ்ப்பிக்கும் -
நின்னைப் புணை காரணமாகக் காலந்தாழ்ப்பிக்கும், இன் இளவேனிற்
குருகு இரைதேரக் கிடக்கும் - இனிய இளவேனிற் பருவத்திலே நாரைகள்
தம் இரையை ஆராயும் அளவிற்றாய்ச் சுருங்கிக்கிடக்கும், இது அன்றோ
வையை - இத் தன்மை யுடையதன்றோ இவ் வையையாறும் இதனால்,
நின்...... .... வையை வயமாக வை - நின்னுடைய (காமமும்)
இவ் வையையின் வழிப்பட்டதே என்று நினைத்திடுக;
(வி-ம்.) பதி - உறைவிடம். அருகு - அண்மையிடம்.
இவ்வையை
கார்ப்பருவத்தே புணைதேடும்படி பெருகும். இளவேனிலில்
இரைதேரும்படி வற்றிக்கிடக்கும். நினது காமமும் ஒருகாலத்தே அங்ஙனம்
பெருகி ஒருகாலத்தே வற்றிவிடுகின்றது. அதனால் நீ சொன்னது ஒக்கும்
என்று அசதியாடினாளாகக் கருதுக. வை - மனத்தில்வை.
(பரிமே.) 75-8. மேல் வையைப் பெருக்கன்றோ என்ற
துணையல்லது அதன் இயல்பு கூறிற்றிலள்; கூறாதாள் இதனால் அதன்
இயல்பு கூறி இவ் வொப்புமை யுண்மையான் அதன்கண் அவளோடு
நுகர்ந்த நுகர்ச்சி இன்னும் ஒழிதற்பாற்றன்றென்றாளாம் (?) (இக்கருத்து
விளக்கமாகவில்லை).
79 - 86: செல்யாற்று . . . . . . . காத்திவரவு
(இ - ள்.) செல்யாற்றுத் தீம்புனலில் செல் மரம்போல
-
தனக்கென இயக்கமின்றி இனிய நீரின்கண் அந்நீர் இயக்கிய வழியே
இயங்கும் மரம்போல வவ்வு வல்லார் - நின்னைக் கவர்ந்து
கொள்ளுதலில் வல்லவராகிய மகளிர் இயக்கிய வழியே இயங்கி, புணை
ஆகிய மார்பினை - அம் மகளிர் நீரோடுதற்கண் தெப்பமாகிய
மார்பினையும் உடையையாய், என்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை
- அவ்வாறிருத்தற்கு ஒருசிறிதும் அஞ்சாமலும் இராப்பொழுதெல்லாம்
அவளோடு தங்கா நின்றனை, வையை உடைந்த மடை அடைத்தக்
கண்ணும் - இவ் வையை யாற்றின்கண் உடைந்தொழிந்த மடையை
அடைத்த விடத்தும், பின்னும் மலிரும் பிசிர்போல - மீண்டும் ஒழுகும்
ஊற்றுநீர்போல, முன் அனற்றிய துன்பு அவிய நீ அடைந்த கண்ணும் -
முன்னே வெதுப்பிய துன்பம் நீங்கும்படி நீ அவர் பால் தங்கியிருந்தாய்
எனினும், பனித்துப் பனிவாரும் கண்ணவர் நெஞ்சம் கனற்றுபு - நினது
பிரிவாலே நீர்பில்கி ஒழுகும் கண்ணையுடைய அம் மகளிர் நெஞ்சத்தைப்
பின்னரும் வெதும்பச்செய்து, வரவு கரத்தி - இங்ஙனம் எம்மிடத்தே
வருதலை இனித் தவிர்வாயாக (என்று காதற்பரத்தை கூறினள்);
(வி-ம்.) செல்யாறு: வினைத்தொகை. தீம்புனல்: இயற்கை
அடைபுணர்ந்தது. நுமக்கு ஆடுதற்கு இனிய புனல் என்றாள் எனினு |
|
|
|