278

1காமரு, விகாரம்; மருவும், ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங் கெட்டு மகரம் சந்தியாற் கெட்டது.

2எனவாங்கு

எ - து, என்று; எ - று. ஆங்கு, அசை.

21 (1) தன்றீமை பலகூறிக் கழறலி னென்றோழி
மறையிற்றான் மருவுற மணந்தநட் பருகலாற்
பிறைபுரை நுதலவர்ப் பேணிநம்
முறைவரைந் தனரவ ருவக்கு நாளே

எ - து: 3தன் பொல்லாங்குகள் பலவற்றையுஞ் சொல்லி யான் (2) கழறு கையினாலே அவர் என் கூற்றினை 4இஃதுண்மையென்று தெளிந்து களவொழுக்கத்திலே தாம் நம்மோடுமருவுதலுறுகையினாலே கூடினஉறவு பின்னர் வரைவுமுயற்சியான் 5(3) அருகுகையினாலே, பிறையொத்த நுதலினை யுடையாய்! இக்களவொழுக்கத்தில் வேட்கைநீங்கி நாம் அவரைப் பேணி அவரிடத்தே தங்குதலைஅவர் விரும்பின நாளிலே நஞ்சுற்றத்தாரும் அவர்க்கே கொடுப்பதாக அறுதியிட்டுவிட்டார்; இதுகாண் நமக்குண்டாகிய நன்மை; 6எ - று,

தன், தான், அவரென்பது ஒருமைப்பன்மை மயக்கம். 7உறைதல் உறையென விகாரமாயிற்று.

இதனால், தலைவிக்குச் செல்வமாகிய உவகை பிறந்தது.

இஃது ஏழடித்தரவும் நான்கடித் 8தாழிசையும் தனிச்சொல்லும் நான் கடிச்சுரிதகமும் பெற்றுவந்த ஒத்தாழிசைக்கலி. (9)

(46) வீயகம் புலம்ப வேட்டம் போகிய
மாஅ லஞ்சிறை மணிநிறத் தும்பி
வாயிழி கடாத்த வான்மருப் பொருத்தலோ
டாய்பொறி யுழுவை தாக்கிய பொழுதின்
5 வேங்கையஞ்சினையென விறற்புலி முற்றியும்
பூம்பொறியானைப் புகர்முகங் குறுகியும்

1. “நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக் கண், மேற்சென் றிடித்தற் பொருட்டு” குறள் 784.

2. கழறுகை - இடித்துச் சொல்லுகை.

3. அருகுகை - அருமையாதல்.

(பிரதிபேதம்) 1காமர், 2எனவாங்கு ஆங்கசை, 3என்று பொல்லாங்கு, 4இதுவுண்மை, 5அருகையினாலே, 6என ஆற்றுவித்தாள், 7உறைதல் விகாரம், 8தாழிசைகளும்.