494

இதன் பொருள்.

பெருந்திரு நிலைஇய வீங்குசோற் றகன்மனைப்
பொருந்துநோன் கதவொற்றிப் புலம்பியா முலமர
விளையவர் தழூஉவாடு மெக்கர்வாய் வியன்றெருவின்
விளையாட்டிக் கொண்டு வரற்கெனச் (1) சென்றா
யுளைவிலை, யூட்டலென் றீம்பால் பெருகு மளவெல்லா
நீட்டித்த காரண மென்

எ - து : பெரிய செல்வம் நிலைபெற்ற, மிகுகின்ற சோற்றையுடைய அகன்ற மனையிடத்து இரட்டையாய் வந்து சேரும் பலகைகள் தம்மிற் பொருந்தின கதவைத் தீண்டிநின்று பிள்ளையைக் கைவிட்டு்த் தனித்து யாம் வருந்தப் பிள்ளைகள் தம்மிற்கூடி விளையாடும் 1இடுமணலை இடத்தேயுடைய அகற்சியையுடைய தெருவிலே பிள்ளையை 2விளையாடுவித்துக்கொண்டு வருதற்கென்று போன நீ, இனிய பாலை யான் பிள்ளைக்கு ஊட்டாமல் அப்பால் பெருகச்சுரக்கும் அளவெல்லாம் பிள்ளை பாலுண்ணாதிருத்தற்கு நின்மனத்தில் வருத்தமிலையாய்த் தாழ்த்த காரணம்யாது? அதனைக்கூறு.3எ - று.

கேட்டீ,

8 பெருமடற் பெண்ணைப் பிணத்தோட்டுப் பைங்குரும்பைக்
குடவாய்க் கொடிப்பின்னல் வாங்கித் தளரும்
பெருமணித் திண்டேர்க் குறுமக்க ணாப்ப
ணகனகர் மீடருவா னாகப் புரிஞெகிழ்பு
நீல 4நிரைப்போ துறுகாற் குலைவன போற்
சாலகத் தொல்கிய கண்ண ருயர்சீர்த்தி
(2) யாலமர் செல்வ னணிசான் மகன்விழாக்

1. "எம்முலை, பாலொடு வீங்கத் தவநெடி தாயினை, புத்தேளிர் கோட்டம் வலஞ்செய் திவனொடு,
புக்கவழியெல்லாங் கூறு" கலி. 82 : 2 - 5.

2. (அ) "ஆலமர் செல்வ னணிசால் பெருவிறல், போல வருமென் னுயிர்" கலி. 81 : 9 - 10. (ஆ) "புதல்வரைப், பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத், திலங்குதொடி நல்லார் சிலர்நின் றேற்றி, யாலமர் செல்வன் மகன்விழாக் கால்கோள், காண்மி னோவெனக் கண்டுநிற் குநரும்" மணி. 3 : 141 - 145. எனவும் (இ) "ஆல்கெழு கடவுட் புதல்வ" முருகு. 256. (ஈ) "ஆலமர் செல்வன் புதல்வன்" சிலப். 24. "வேலனார்" எனவும் (உ) "ஆலமர் செல்வற்கு" சிறுபாண். 97.(ஊ) "ஆலமர்கடவுள்" புறம் 198 : 9. எனவும் வருதல் காண்க.

(பிரதிபேதம்) 1ஈண்டுமணலை, 2விளையாட்டு வித்து, 3என்றாள், 4நிலைப்போது.