516

கன்றிய தெவ்வர்க் கடந்து (1) களங்கொள்ளும்
வென்றிமாட் டொத்தி பெருமமற் றொவ்வாதி
யொன்றினேம் யாமென் றுணர்ந்தாரை நுந்தைபோன்
மென்றோ ணெகிழ விடல்

எ - து: தலைவா! பெருமா! 1நுந்தையை அழகெல்லாம் ஒத்திருப்பினும் நுந்தை நிற்கின்ற நிலைகளின் கூற்றில் உனக்கொத்த குறிக்கப்படுங் குணங்களை யான் கூறக்கேட்டு ஒப்பாய்; அவற்றுள் மாறுபாட்டிற்பட்ட பகைவரை வென்று களத்தைக்கொள்ளும் வெற்றிக்குணத்திடத்து அவனை ஒப்பாய்; மற்றுள்ள குணங்களிலே யாம் இவனோடு ஒருமனமாயினேமென்று உணர்ந்திருந்த மகளிரை நுந்தை மென்றோள் மெலிய விடுமாறுபோல நீயும் அவர் மெல்லிய தோள் மெலியும்படி விடுதலாகிய 2பரத்தைமையை ஒவ்வாதேகொள். எ - று.

17 (2) பால்கொள லின்றிப் பகல்போன் 3முறைக்கொல்காக்
கோல்செம்மை யொத்தி பெருமமற் றொவ்வாதி

1. (அ) "களங்கொள் யானைக் கடுமான் பொறைய"(ஆ) ‘அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர், தாமாய்ந் தனரே குடை துளங் கினவே, யுரைசால் சிறப்பின் முரைசொழிந் தனவே, பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞில, மிடங்கெட வீண்டிய வியன்கட் பாசறைக், களங்கொளற் குரியோ ரின்றித் தெறுவர, வுடன்வீழ்ந் தன்றா லமரே" புறம். 53 : 5; 62 : 7 - 13.(இ) 'அமர்க்கள மரசன தாகத் துறந்து, தவப் பெருங் கோலங் கொண்டோர்' சிலப். 28 : 104 - 5.(ஈ) "வென்று களங் கொள்ளுமேல் வேந்து" பெரும்பொருள். (தொல். புறத். சூ. 5. நச். மேற். (உ) "இருங்களி யானை யினமிரிந் தோடக், கருங்கழலான் கொண்டான் களம்"(ஊ) "வென்று களங் கொண்ட வேல்வேந்தே" பு - வெ. வாகை. 26. பாடாண். 37.(எ) "களங்கோடற் குரியசெருக் கண்ணி யக்கால்" கம்ப. சூர்ப்பணகை. 139.(ஏ) "வென்று வெங்களங்கொண்டு"(ஐ) "இக னெடுங்களம் வென்று கொள்குவம்"
(ஒ) "பொரு களங் கொண்டு வாகை புனைந்து" வில்லி. காண்டவதகன. 53. பதின்மூன்றாம். 29. பதினைந்தாம். 12. என்பவைகளும் (ஓ) "தேன்மிடைந்த தாரினான் செங்களஞ் சிறந்ததே" (சீவக. 279) என்புழி, ‘இத்துணையும் இவன் வெற்றியாதலின், இவன் களமென்றார்’ என்னும் விசேடவுரையும்ஈண்டு அறிதற்பாலன.

2. "பால்கொள..............ஒவ்வாதி" என்னும் இரண்டடிகளை 'ஒப்பு வழியுவத்தற்கு உதாரணமாகச் சொல்லுப' என்பர் பேராசிரியர்; தொல். மெய்ப். சூ. 22.

(பிரதிபேதம்)1நுந்தை அழகெல்லாம், 2பரத்தமை, 3 முறைகோடாக்.