| 5 | துயங்கி யிருந்தார்க் குயர்ந்த பொருளு | | | மரிதி னறஞ்செய்யா வான்றோ ருலகு | | | முரிதி னொருதலை யெய்தலும் வீழ்வார்ப் | | | பிரிதலு மாங்கே புணர்தலுந் தம்மிற் | | | றருத நகையாதான் மற்று; |
| 10 | நனவினாற் போலு நறுநுதா லல்கற் | | | கனவினாற் சென்றேன் கலிகெழு கூடல் | | | வரையுறழ் நீண்மதில் வாய்சூழ்ந்த வையைக் | | | கரையணி காவி னகத்து; |
| 14 | உரையினி, தண்டாத்தீஞ் சாய னெடுந்தகா யவ்வழிக் | | | கண்ட தெவன்மற்று நீ; |
| 16 | கண்டது, உடனம ராயமொ டவ்விசும் பாயு | | | மடநடை மாயின மந்தி யமையத் | | | திடன்விட் டியங்கா விமையத் தொருபா | | | லிறைகொண் டிருந்தன்ன நல்லாரைக் கண்டேன் | | | றுறைகொண் டுயர்மணன் மேல்; ஒன்றி நிறைவதை |
| 21 | ஓர்த்த திசைக்கும் பறைபோனின் னெஞ்சத்து | | | வேட்டதே கண்டாய் கனா; |
| 23 | கேட்டை, விரையனீ மற்று வெகுள்வா யுரையாண் | | | டிதுவாகு மின்னகை நல்லாய் பொதுவாகத் | | | தாங்கொடி யன்ன தகையா ரெழுந்ததோர் | | | பூங்கொடி வாங்கி யிணர்கொய்ய வாங்கே | | | சினையலர் வேம்பின் பொருப்பன் பொருத | | | முனையரண் போல வுடைந்தன்றக் காவிற் | | | றுனைவரி வண்டி னினம்; |
| 30 | மற்றாங்கே, நேரிணர் மூசிய வண்டெல்லா மவ்வழிக் | | | காரிகை நல்லார் நலங்கவர்ந் துண்பமோ லோராங்கு மூச (1) | | | அவருள், | | | ஒருத்தி, செயலமை கோதை நகை | | | ஒருத்தி, யியலார் செருவிற் றொடியொடு தட்ப |
| 35 | ஒருத்தி, தெரிமுத்தஞ் சேர்ந்த திலகம் | | | ஒருத்தி, யரிமா ணவிர்குழை யாய்காது வாங்க |
1. இஃது ஆறுமெய்பெற்றதென்பதனால் இவ்வாறு பிரிக்கப்பட்டது.
|