அவர்தாம் அறுதியாக; எம்முடைய சுற்றத்தாரிடத்து அவர் வரைவுநேர்தற்குச் செய்யுஞ் செயலை நும்முடைய சுற்றத்தார் பெரிதும் வல்லராயிருந்தாரென்றாள். எ - று. 1இஃது, இகழ்ச்சி. 12 | ஓஒ(1) வழங்காப் பொழுதுநீ கன்றுமேய்ப் பாய்போல் வழங்க லறிவா ருரையாரே 2லெம்மை யிகழ்ந்தாரே யன்றோ வெமர் |
எ - து: அதுகேட்டவன் தன் மனத்தே ஓஒ! என வியந்து, பின்னர் வெயில்வெம்மையால் ஒருவரும் வழங்காத உச்சிக்காலத்தே நீ கன்று 3மேய்ப்பாய்போலப் பிறர்க்கு நோயைச்செய்து திரிகின்றதன்மையை அறிந்திருக்கின்றவர்கள் இப்படித் திரிகின்றாளென்று எனக்கு உரையாதிருப்பாராயில் எம்முடைய சுற்றத்தார் எம்மை இகழ்ந்தாரேயல்லவோ என்றான். எ - று. 15 | ஒக்கு, மறிவல்யா னெல்லா விடு |
எ - து: அதுகேட்டவள் நீ கூறியது ஒக்கும்; ஏடா! இது பொய் யென்று யான் அறியவேண்டா; இக்கூற்றைக் கைவிடென்றாள். எ - று. 16 | விடேன்யா, னென்னீ குறித்த திருங்கூந்தா னின்னையென் முன்னின்று சொல்லலோம் பென்றமை யன்றி யவனைநீ புல்லலோம் பென்ற துடையரோ மெல்ல | 20 | 4முயங்குநின் முள்ளெயி றுண்கு மெவன்கொலோ மாயப் பொதுவ னுரைத்த வுரையெல்லாம் |
கொள்ளலாம். இவ்வுரையாசிரியர் இதழென்பதைச் சினையாகு பெயராக்கிப் பல்லிதழென்பதற்கு, பல பூவென்று பொருள் கூறினார். இதற்கே பலவாகிய இதழினையுடையதென்று அன்மொழித் தொகை யாக்கிப் பூவென்று பொருள் கூறுவாருமுளர். ‘பல்லித ழுண்கண்’ என்னுந்தொடர்மொழி, (நற். 240 : 11 ; குறுந். 5; ஐங். 170, 190, 334, 351, 474 ; கலி. 45 : 11, 100 : 10) பலவிடங்களிலும் வருதல்காண்க. 1. வினைவல பாங்கின ளாய தலைவியை நோக்கித் தலைவன் கூறியதற்கு, "வழங்காப் பொழுதுநீ.....................................வெமர்" என்பது மேற்கோள்; தொல். அகத். சூ. 23. நச். (பிரதிபேதம்)1இதுஇகட்சி, 2என்னை, 3மேய்ப்பாரைப்போலே, 4முயங்கிநின் முள்ளெயிறுண்டுமெவன்.
|