889

அவளைக்கூடுவேனோஎன்று ஆராய்கின்ற யான் அக் (1) கூடலில் ஒருபாகத்தை இழைத்த அளவிலே 1அவ்வாராய்ச்சிக்குப் பிறிதொன்றாகிய வளைவு தன்


(ஏ) ‘‘சென்றார் வரைய கருமஞ் செருவேலான், பொன்றாங் கணியகலம் புல்லப் பொருந்துமேற், குன்றாது கூடுகெனக் கூறிமுத்த வார்மணன்மே, லன்றாங் கணியிழையா ளாழி யிழைத்தாளே’’ சீவக. 1037. (ஐ) ‘‘மெய்யி லணைத்துருகிப் பைய வகன்றவர்தா, மீள்வ-ரெனக்கருதிக் கூடல் வளைத்தறவே, கையி லணைத்தமணற் கண்பனி சோர்புனலிற், - கரைய விருந்தழுவீர் கடைதிற மின்றிறமின்’’ கலிங்க. 51. (ஒ) ‘‘குழைத்தபூங் கொம்பனா ளொருத்தி கூடலை, யிழைத்தன ளவ்வவ ளிட்ட போதெல்லாம், பிழைத்தலு மனங்கவேள் பிழைப்பி லம்பொடு, முழைத்தன ளுயிர்த்தன ளுயிருண் டென்னவே’’ (ஓ) ‘‘மின்னகு மணிவிரற் றேய வீழகணீர், துன்னரும்பெருஞ்சுழி யழிப்பச் சோர்வினோ, டின்னகை நுளைச்சிய ரிழைக்கு மாழிசால், புன்னையம் பொதும்பரும்புக்கு நோக்கினான்’’ கம்ப. உண்டாட்டுப். 33. விபீடண. 28. (ஒள) ‘‘வளைத்துக் கிடந்த வரிமணற் கூடலும்’’ அம்பிகா. 322. (ஃ) ‘‘நிலமே சுழித்தனை’’ குலோத். 258. (அஅ) ‘‘சுழித்த கூடல் கூடுறாது நீர்சொரிந்து நாடொறு, மழித்த கண்கள்’’ நைடத. கைக். 6. (ஆஆ) ‘‘சுழிக்குஞ் சுழிக்குத் தொகைவேறு வேறுறச் சோர்வளைபோ, லழிக்குங்கண் ணீர்பல காலுமந் தோவள மாமனைத்துஞ், செழிக்குந் தமிழ்க்குரு கூர்ச்சட கோபன் சிலம்பினிலென், விழிக்குங் கரத்துக்கு நானென்ன வோவெவ் வினைசெய்ததே’’ மாறன். 286. (இஇ) ‘‘ஆய்சுவைத்தேன், மொழிக்குங் குமமுலை யாள்விரல் கன்றவெண் முத்தமணற், சுழிக்குங் கழிக்கு மொழிக்குங்கண் ணீரென்று துன்புறுமே’’ சீகாழிக். 308. என்று வருபவையும் (ஈஈ) நாலா. நாச்சியார். 4-வது ‘தெள்ளியார் பலர்’ என்னும் தலைப்பையுடைய கூடற் குறிப்பின் 10 பாசுரங்களில் இச்செய்தியாக வருபவையும் (உஉ) ‘‘செய்குறி யாழிவைகறோ றெண்ணி, யெழுது சுவர் நினைந்த வழுதுவார் மழைக்கண்’’ அகம். 351 : 10-11. என்பது இச்செய்தியைக் குறிப்பதாயின் அதுவும் இங்கே அறிதற்பாலன. (ஊஊ) ‘‘ஆழி திருத்தும் புலியூருடையா னருளினளித், தாழி திருத்து மணற்குன்றி னீத்தகன் றார் வருகென், றாழிதிருத்திச் சுழிக்கணக் கோதிநை யாமலைய, வாழி திருத்தித்தரக்கிற்றி யோவுள்ளம் வள்ளலையே’’ (கோவையார். 186) என்னுஞ்செய்யுளாலும் அதற்கு முன் பின்னுள்ள குறிப்புரைகளாலும் இதற்குக் கூடற்றெய்வத்தை வழிபடலுண்டென்பது விளங்கும். அடுத்த குறிப்பும் பார்க்க. இது தமிழ்நூல் வழக்கு.

1. (அ) ‘‘பாகவரை வாங்கிப் பழுதாகிற் பாவியேற், கேகுமா லாவி யென நினைப்ப’’ சீவக. 1038. (ஆ) ‘‘கூடற்பெருமானைக் கூடலார்கோமானைக், கூடப் பெறுவேனேற் கூடென்று-கூட, லிழைப்பாள்போற் காட்டி யிழையா திருக்கும், பிழைப்பிற் பிழைபாக் கறிந்து’’ முத்தொள்.

(பிரதிபேதம்)1அவராராய்ச்சிக்கு.