950

12  மாலை நீ;
கலந்தவர் காமத்தைக் கனற்றலோ செய்தாய்ம
னலங்கொண்டு நல்காதார் நனிநீத்த புலம்பின்க
ணலந்தவர்க் கணங்காத றக்கதோ நினக்கு;
16  மாலை நீ;
எங்கேள்வற் றருதலுந் தருகல்லாய் துணையல்லை
பிரிந்தவர்க்கு நோயாகிப் புணர்ந்தவர்க்குப் புணையாகித் 
திருந்தாத செயினல்லா லில்லையோ நினக்கு;
எனவாங்கு;
21 ஆயிழை மடவர லவல மகலப்
பாயிருட் பரப்பினைப் பகல்களைந் ததுபோலப்
போயவர் மண்வௌவி வந்தனர்
சேயுறை காதலர் செய்வினை முடித்தே.

இது "வெளிப்படை தானே கற்பினொ டொப்பினு, ஞாங்கர்க்கிளந்த முன்றுபொருளாக, வரையாது பிரிதல் 1கிழவோற் கில்லை’’ (1) என்பதனான் அரசன் மண்கோடற்கு ஏவுதலின் வாளாணெதிரும் பிரிவின் கண் தலைவன் வரைவிடைவைத்து வேந்தற்குற்றுழிப் பிரிந்துழி அவள் வருத்தமிகுதி கண்டார் கூறியது.

இதன் பொருள்

தொல்லியன் ஞாலத்துத் தொழிலாற்றி ஞாயிறு
வல்லவன் கூறிய வினைதலை வைத்தான்போற்
கல்லடைபு கதிரூன்றிக் (2) கண்பயங் கெடப்பெயர
(3) வல்லது கெடுப்பவ னருள்கொண்ட முகம்போல 
மல்லனீர்த் திரையூர்பு மாலிருண் மதிசீப்ப


1. தொல். கள. சூ. 50.

2. (அ) "மலர்தலை யுலகத் திருளெறி விளக்கு, மன்னுயிர் விழிக்கக் கண்ணிய கண்ணும்..............பரிதிவா னவனே’’ கல். 33 : 23 - 31; (ஆ) "இருவிழிகள் வாண்முகத்தி லிருந்தாலும் வானிரவி யெழுந்தாலன்றிக், கருதுநிலப் பல்பொருளுங் காண்டலரிதாம்’’ திருக்குற்றாலப். நூற்பயன். 1.

3. "குட்டுவன், குடிபுறந் தருங்காற் றிருமுகம் போல, வுலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம்’’ சிலப். 28 : 37 - 39.

(பிரதிபேதம்)1கிழவற்கில்லை.