பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்825

எ - து. தனக்கு வலியைத்தரும் என்று கருதித் தான் 1வழிபட்ட தெய்வம் தன்னைச் சேர்ந்தவர்கட்கு நெஞ்சழியும் நோய் கைமிகும்படி வருத்தமாகிய தன்மைபோல நின்னைத்தனக்குவலியென்று 2வழிபட்டஎன்றோழியை நீ செய்த பழி எங்கும்பரந்து அலர்தூற்றுகையினாலே உண்டான மிக்க நினைவு வருத்த, நீங்குதல் கொடிதுகாணெனத் தோழி வரைவுகடாயினாள். எ - று.

இதனால், தலைவிக்கு அசைவுபிறந்தது.

இஃது ஒத்தாழிசைக்கலி. (15)

(133). மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன்
கான லணிந்த வுயர்மண லெக்கர்மேற்
சீர்மிகு சிறப்பினோன் மரமுதற் கைசேர்த்த
நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப்
பூமலர்ந் தவைபோலப் புள்ளல்குந் துறைவகேள்;
ஆற்றுதலென்பதொன் றலந்தவர்க் குதவுதல்
போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப்படுவது பாடறிந் தொழுகுத
லன்பெனப் படுவது தன்கிளைசெறாஅமை
10 யறிவெனப்படுவது பேதையார் சொன்னோன்றல்
செறிவெனப்படுவது கூறியது மறாஅமை
நிறையெனப் படுவது மறைபிறரறியாமை
முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல்
பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்;
15 ஆங்கதையறிந்தனி ராயினென் றோழி
நன்னுத னலனுண்டு துறத்தல் கொண்க
தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைத
னின்றலை வருந்தியா டுயரஞ்
சென்றனை களைமோ பூண்கநின் றேரே

இது ‘‘வரைவு 3வுடம் பட்டோர்க் கடாவல் வேண்டினும்’’(1) என்பதனால் தலைவன் தெருளாதவனைத் தெருட்டி வரைவுகடாயது.


1. தொல். கள. சூ. 23. இச்சூத்திரத்தின் இவருரையிலும் இச்செய்யுள் முற்காலத்து வரைவுகடாவுமாறுபோ லன்றி வரைவு கடாயதற்கு மேற்கோள்.

(பிரதிபேதம்)1வழிப்பட், 2வழிப்பட்ட, 3உடன்பட்டோர்க் கடாவவேண்.