| தலைவி
|
| யார் இவன், என்னை விலக்குவான்? நீர் உளர் |
| பூந் தாமரைப் போது தந்த விரவுத் தார்க் |
| கல்லாப் பொதுவனை; நீ மாறு; நின்னொடு |
| சொல்லல் ஓம்பு என்றார், எமர் |
| தலைவன்
|
5 | எல்லா! 'கடாஅய கண்ணால், கலைஇய நோய் செய்யும் |
| நடாஅக் கரும்பு அமன்ற தோளாரைக் காணின், |
| விடாஅல்; ஓம்பு' என்றார், எமர் |
| தலைவி
|
| கடாஅயார், நல்லாரைக் காணின், விலக்கி, நயந்து, அவர் |
| பல் இதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட, |
10 | நல்லது கற்பித்தார் மன்ற; நுமர் பெரிதும் |
| வல்லர், எமர்கண் செயல் |
| தலைவன்
|
| ஓஒ! வழங்காப் பொழுது, நீ கன்று மேய்ப்பாய் போல், |
| வழங்கல் அறிவார் உரையாரேல், எம்மை |
| இகழ்ந்தாரே அன்றோ, எமர்? |
| தலைவி
|
15 | ஒக்கும்; அறிவல் யான் எல்லா! விடு |
| 'என்னை முயங்கு' என்ற தலைவனை நோக்கித் தலைவி உரைத்தல்
|
| 'விடேன், யான்; என், நீ குறித்தது? இருங் கூந்தால்! |
| நின்னை, "என் முன் நின்று, |
| சொல்லல் ஓம்பு" என்றமை அன்றி, "அவனை நீ |
| புல்லல் ஓம்பு" என்றது உடையரோ? மெல்ல |
20 | முயங்கு; நின் முள் எயிறு உண்கும். ' எவன்கொலோ? |
| மாயப் பொதுவன் உரைத்த உரை எல்லாம் |
| வாய் ஆவதுஆயின், தலைப்பட்டாம்; பொய்ஆயின், |
| சாயல் இன் மார்பில் கமழ்தார் குழைத்த நின் |
| ஆய் இதழ் உண்கண் பசப்ப, தட மென் தோள் |
25 | சாயினும், ஏஎர் உடைத்து.' |