| கையில் உள்ளது யாது?' எனத் தலைவியைத் தலைவன் வினாவுதல்
|
| மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ, |
| பேணித் துடைத்தன்ன மேனியாய்! கோங்கின் |
| முதிரா இள முகை ஒப்ப, எதிரிய |
| தொய்யில் பொறித்த வன முலையாய்! மற்று, நின் |
5 | கையது எவன்? மற்று உரை |
| தலைவியின் விடையும் தலைவன் வினாவும்
|
| 'கையதை சேரிக் கிழவன் மகளேன் யான்; மற்று இஃது ஓர் |
| மாதர்ப் புலைத்தி விலையாகச் செய்தது ஓர் |
| போழின் புனைந்த வரிப் புட்டில்.' 'புட்டிலுள் என் உள? |
| காண் தக்காய்! எற் காட்டிக் காண்.' |
| தலைவி
|
10 | காண், இனி: தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு |
| காட்டுச் சார்க் கொய்த சிறு முல்லை, மற்று இவை |
| தலைவன்
|
| முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய்! |
| எல்லிற்று, போழ்து ஆயின் ஈதோளிக் கண்டேனால்; |
| 'செல்' என்று நின்னை விடுவேன், யான்; மற்று எனக்கு |
15 | மெல்லியது, ஓராது அறிவு |