| வெல் புகழ் மன்னவன், விளங்கிய ஒழுக்கத்தால், |
| நல் ஆற்றின் உயிர் காத்து, நடுக்கு அற, தான் செய்த |
| தொல் வினைப் பயன் துய்ப்ப, துறக்கம் வேட்டு எழுந்தாற்போல் |
| பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர, |
5 | ஆனாது கலுழ் கொண்ட உலகத்து, மற்று அவன் |
| ஏனையான் அளிப்பான் போல், இகல் இருள் மதி சீப்ப, |
| குடை நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும் |
| இடை நின்ற காலம் போல், இறுத்தந்த மருள் மாலை! |
| மாலை நீ தூ அறத் துறந்தாரை நினைத்தலின், கயம் பூத்த |
10 | போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய்; |
| ஆய் சிறை வண்டு ஆர்ப்ப, சினைப் பூப் போல் தளை விட்ட |
| காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய் |
| மாலை நீ தையெனக் கோவலர் தனிக் குழல் இசை கேட்டு |
| பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்; |
15 | செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும், |
| பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புது நலம் கடிகல்லாய் |
| மாலை நீ தகை மிக்க தாழ் சினைப் பதி சேர்ந்து புள் ஆர்ப்ப, |
| பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய்; |
| தகை மிக்க புணர்ச்சியார், தாழ் கொடி நறு முல்லை |
20 | முகை முகம் திறந்தன்ன, முறுவலும் கடிகல்லாய் |
| என ஆங்கு |
| மாலையும் அலரும் நோனாது, எம்வயின் |
| நெஞ்சமும் எஞ்சும்மன் தில்ல எஞ்சி, |
| உள்ளாது அமைந்தோர், உள்ளும், |
25 | உள் இல் உள்ளம், உள்உள் உவந்தே |