| 'கண்டவர் இல்' என, உலகத்துள் உணராதார், |
| தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள், |
| நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், 'அறிபவர் |
| நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,' |
5 | வண் பரி நவின்ற வய மான் செல்வ! |
| நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால், |
| 'அன்பு இலை' என வந்து கழறுவல்; ஐய! கேள்: |
| மகிழ் செய் தேமொழித் தொய்யில் சூழ் இள முலை |
| முகிழ் செய முள்கிய தொடர்பு, அவள் உண்கண் |
10 | அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்! |
| இமிழ் திரைக் கொண்க! கொடியைகாண் நீ |
| இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ, |
| நலம் செல நல்கிய தொடர்பு, அவள் சாஅய்ப் |
| புலந்து அழ, புல்லாது விடுவாய்! |
15 | இலங்கு நீர்ச் சேர்ப்ப! கொடியைகாண் நீ |
| இன் மணிச் சிலம்பின் சில் மொழி ஐம்பால் |
| பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் |
| நுண் வரி வாட, வாராது விடுவாய்! |
| தண்ணந் துறைவ! தகாஅய்காண் நீ |
20 | என ஆங்கு |
| அனையள் என்று, அளிமதி, பெரும! நின் இன்று |
| இறை வரை நில்லா வளையள் இவட்கு, இனிப் |
| பிறை ஏர் சுடர் நுதற் பசலை |
| மறையச் செல்லும், நீ மணந்தனை விடினே |