| 'நயனும், வாய்மையும், நன்னர் நடுவும், |
| இவனின் தோன்றிய, இவை' என இரங்க, |
| புரை தவ நாடி, பொய் தபுத்து, இனிது ஆண்ட |
| அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல், |
5 | நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செல, |
| கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல், |
| பல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை |
| இம் மாலை, |
| ஐயர் அவிர் அழல் எடுப்ப, அரோ, என் |
10 | கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும்! |
| இம் மாலை, |
| இருங் கழி மா மலர் கூம்ப, அரோ, என் |
| அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்! |
| இம் மாலை, |
15 | கோவலர் தீம் குழல் இனைய, அரோ, என் |
| பூ எழில் உண்கண் புலம்பு கொண்டு இனையும்! |
| என ஆங்கு, |
| படு சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை, |
| குடி புறங்காத்து ஓம்பும் செங்கோலான் வியன் தானை |
20 | விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர் |
| தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே |