| படை பண்ணிப் புனையவும், பா மாண்ட பல அணை |
| புடை பெயர்ந்து ஒடுங்கவும், புறம் சேர உயிர்ப்பவும், |
| ‘உடையதை எவன் கொல்?’ என்று ஊறு அளந்தவர்வயின் |
| நடை செல்லாய், நனி ஏங்கி நடுங்கற்காண் நறுநுதால்! |
5 | ‘தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்ப, துறந்து நீ, |
| வல் வினை வயக்குதல் வலித்திமன்; வலிப்பளவை, |
| நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது, |
| நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ? |
| ஆற்றல் நோய் அட, இவள் அணி வாட, அகன்று நீ, |
10 | தோற்றம் சால் தொகு பொருள் முயறிமன்; முயல்வளவை, |
| நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்குக் |
| கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ்நாளும் நிலையுமோ? |
| வகை எழில் வனப்பு எஞ்ச, வரை போக வலித்து நீ, |
| பகை அறு பய வினை முயறிமன்; முயல்வளவை, |
15 | தகை வண்டு புதிது உண்ணத் தாது அவிழ் தண் போதின் |
| முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ?’ |
| என ஆங்கு, |
| பொருந்தி யான் தான் வேட்ட பொருள்வயின் நினைந்த சொல், |
| திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய |
20 | மருந்து போல், மருந்து ஆகி, மனன் உவப்ப |
| பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே |