| இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன் |
| உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக, |
| ஐ இரு தலையின் அரக்கர் கோமான் |
| தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை |
5 | எடுக்கல்செல்லாது உழப்பவன் போல |
| உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக் |
| கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை |
| நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன் |
| கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்: |
10 | ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால், |
| நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை, |
| கார் பெற்ற புலமே போல், கவின் பெறும்; அக் கவின் |
| தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண் |
| இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால், |
15 | பொருளில்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை, |
| அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும்; அவ் அணி |
| தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண் |
| மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால், |
| அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை, |
20 | திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்; அத் திருப் |
| புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல், உரைத்தைக்காண் |
| என ஆங்கு, |
| நின் உறு விழுமம் கூறக் கேட்டு, |
| வருமே, தோழி! நல் மலை நாடன் |
25 | வேங்கை விரிவு இடம் நோக்கி, |
| வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே |