| தோழி
|
| சுணங்கு அணி வன முலை, சுடர் கொண்ட நறு நுதல், |
| மணம் கமழ் நறுங் கோதை மாரி வீழ் இருங் கூந்தல், |
| நுணங்கு எழில், ஒண் தித்தி, நுழை நொசி மட மருங்குல், |
| வணங்கு இறை வரி முன்கை, வரி ஆர்ந்த அல்குலாய்! |
5 | ‘கண் ஆர்ந்த நலத்தாரை, கதுமென, கண்டவர்க்கு |
| உள் நின்ற நோய் மிக, உயிர் எஞ்சு துயர் செய்தல் |
| பெண் அன்று, புனையிழாய்!’ எனக் கூறி தொழூஉம்; தொழுதே, |
| கண்ணும் நீராக நடுங்கினன், இன் நகாய்! |
| என் செய்தான் கொல்லோ இஃது ஒத்தன் தன்கண் |
10 | பொருகளிறு அன்ன தகை சாம்பி உள்உள் |
| உருகுவான் போலும், உடைந்து? |
| தலைவி
|
| தெருவின்கண் காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு, நீ, |
| வாரணவாசிப் பதம் பெயர்த்தல், ஏதில |
| நீ நின்மேல் கொள்வது; எவன்? |
| தோழி
|
15 | ‘அலர்முலை ஆய்இழை நல்லாய்! கதுமென, |
| பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய |
| ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்; |
| மற்று இந் நோய் தீரும் மருந்து அருளாய், ஒண்தொடீ! |
| நின் முகம் காணும் மருந்தினேன்’ என்னுமால்; |
20 | நின் முகம் தான் பெறின் அல்லது, கொன்னே |
| மருந்து பிறிது யாதும் இல்லேல், திருந்திழாய்! |
| என் செய்வாம்கொல், இனி நாம்? |
| தலைவி
|
| பொன் செய்வாம் |
| ஆறு விலங்கித் தெருவின்கண் நின்று ஒருவன் |
25 | கூறும் சொல் வாய் எனக் கொண்டு, அதன் பண்பு உணராம், |
| ‘தேறல், எளிது’ என்பாம் நாம் |
| தோழி
|
| ‘ஒருவன் சாம் ஆறு எளிது’ என்பாம், மற்று |
| தலைவி
|
| சிறிது, ஆங்கே ‘மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க’ என, |
| நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி |
| தோழி
|
30 | பூண் ஆகம் நோக்கி இமையான், நயந்து, நம் |
| கேண்மை விருப்புற்றவனை, எதிர் நின்று, |
| நாண் அடப் பெயர்த்த நயவரவு இன்றே |