| தலைவன் வருகை கண்டு, தோழி தலைவியை நோக்கிக் கூறுதல்
|
| எல்லா! இஃது ஒத்தன் என் பெறான்? கேட்டைக் காண்: |
| செல்வம் கடைகொள, சாஅய், சான்றவர் |
| அல்லல் களை தக்க கேளிருழைச் சென்று, |
| சொல்லுதல் உற்று, உரைகல்லாதவர் போல |
5 | பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும்; மற்று யான் நோக்கின், |
| மெல்ல இறைஞ்சும் தலை |
| தலைவன் எதிர் சென்று, அவனை நோக்கித் தோழி வினாவுதல்
|
| எல்லா! நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய்போல் காட்டினை; |
| நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்! |
| என், நீ பெறாதது? ஈது என்? |
| தலைவன்
|
10 | சொல்லின், மறாதீவாள் மன்னோ, இவள்? |
| செறாஅது ஈதல், இரந்தார்க்கு ஒன்று, ஆற்றாது வாழ்தலின், |
| சாதலும் கூடுமாம் மற்று |
| தோழி
|
| இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும், விழுப் பொருள்; யாது, நீ வேண்டியது? |
| தலைவன்
|
| பேதாய்! பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை; யாழ |
15 | மருளி மட நோக்கின் நின் தோழி என்னை |
| அருளீயல் வேண்டுவல், யான் |
| ‘அன்னையோ?’ என, அறியாதாள் போன்று, தலைவனுக்குத் தோழி கூறி, அவன் நீங்கிய பின்னர், தலைவியொடு உசாவுதல்
|
| "அன்னையோ?" மண்டு அமர் அட்ட களிறு அன்னான்தன்னை ஒரு பெண்டிர் அருளக் கிடந்தது எவன்கொலோ?' |
| தோழி தலைவியை நோக்கிக் குறை நயப்பித்தல்
|
| ஒண்தொடீ! நாண் இலன் மன்ற இவன் |
| ஆயின், ஏஎ! |
20 | ‘பல்லார் நக்கு எள்ளப்படு மடல்மா ஏறி, |
| மல்லல் ஊர் ஆங்கண் படுமே, நறும் நுதல் |
| நல்காள் கண்மாறிவிடின்’ எனச் செல்வானாம் |
| எள்ளி நகினும் வரூஉம்; இடைஇடைக் |
| கள்வர் போல் நோக்கினும் நோக்கும்; குறித்தது |
25 | கொள்ளாது போகாக் குணன் உடையன், எந்தை தன் |
| உள்ளம் குறைபடாவாறு |