| தோழி
|
| நோக்குங்கால், நோக்கித் தொழூஉம், பிறர் காண்பார் |
| தூக்கு இலி; தூற்றும் பழி எனக் கை கவித்துப் |
| போக்குங்கால், போக்கு நினைந்து இருக்கும்; மற்று நாம் |
| காக்கும் இடம் அன்று, இனி |
5 | எல்லா! எவன் செய்வாம்? |
| பூக்குழாய்! செல்லல் அவனுழைக் கூஉய்க் கூஉய் |
| விரும்பி யான் விட்டேனும் போல்வல்; என் தோள்மேல் |
| கரும்பு எழுது தொய்யிற்குச் செல்வல்; ‘ஈங்கு ஆக |
| இருந்தாயோ?’ என்று ஆங்கு இற |
10 | அவன் நின் திருந்துஅடிமேல் வீழ்ந்து இரக்கும், நோய் தீர்க்கும் |
| மருந்து நீ ஆகுதலான் |
| தலைவி
|
| இன்னும், கடம் பூண்டு, ஒருகால் நீ வந்தை; உடம்பட்டாள் |
| என்னாமை என் மெய் தொடு |
| தோழி
|
| இஃதோ? அடங்கக் கேள்: |
15 | நின்னொடு சூழுங்கால், நீயும் நிலம் கிளையா, |
| என்னொடு நிற்றல் எளிது அன்றோ? மற்று அவன் |
| தன்னொடு நின்று விடு |