503 Agananooru
503
கயந்தலைக் குழவிக் கவியுகிர் மடப்பிடி
5.குளகுமறுத் துயங்கிய மருங்குல் பலவுடன்
பாழூர்க் குரம்பையில் தோன்றும் ஆங்கண்
நெடுஞ்சேண் இடைய குன்றம் போகி
பொய்வ லாளர் முயன்றுசெய் பெரும்பொருள்
நம்மின் றாயினும் முடிக வல்லெனப்
10.பொருந்துனி மேவல் நல்கூர் குறுமகள்
நோய்மலிந் துகுத்த நொசிவரற் சின்னீர்
பல்லிதழ் மழைக்கட் பாவை மாய்ப்பப்
பொன்னேர் பசலை ஊர்தரப் பொறிவரி
நன்மா மேனி தொலைதல் நோக்கி
15.இனையல் என்றி தோழி சினைய
பாசரும்பு ஈன்ற செம்முகை முருக்கினப்
போதவிழ் அலரி கொழுதித் தாதருந்து
அந்தளிர் மாஅத்து அலங்கன் மீமிசைச்
செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம்
20.இன்னிள வேனிலும் வாரார்
இன்னே வருதும் எனத்தெளித் தோரே.

-மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

(சொ - ள்.) 10. நல்கூர் குறுமகள் - மகட்கு நல் கூர்ந்தாரது செல்வ மகளாகிய இளைய தலைவியே!

1-10. பகல் செய் பல்கதிர் பருதி அம் செல்வன் - பகலைத் தோற்றுவிக்கும் பல கதிர்களையுடைய ஞாயிறாகிய அழகிய செல்வனது, அகல் வாய் வானத்து ஆழி- அகன்ற இடமாகிய வானின் கண்ணுள்ள ஆணையாய ஆழி, போழ்ந்தென - உலகைக் கிழித்துச் சென்றதாக, நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை - நீரில்லையாக வறந்திட்ட செல்லத் தொலையாத நீண்ட நெறியிடத்தே, கயம் தலை குழவிக் கவிஉகிர் மடப்பிடி - மெல்லிய தலையினையுடைய கன்றினையும் கவிந்த நகத்தினையுமுடைய இளைய யானை, குளகு மறுத்து உயங்கிய - தன் கன்றுண்ண வேண்டித் தான் தழை உணவை உண்ணாது மறுத் தமையின் வாடிய, மருங்குல் பலவுடன் - உடம்பின் உறுப்புக்கள் பலவற்றுடன், பாழ் ஊர் குரம்பையில் தோன்றும் ஆங்கண் - பாழ்பட்ட ஊரிலுள்ள குடிசைகள் போலத் தோன்றும் அவ்விடங்களையுடைய, நெடு சேண் இடைய குன்றம் போகிய-நெடிய சேய்மையிலுள்ள குன்றங்களைத் தாண்டிச் சென்ற, பொய்-வலாளர் - பொய் மிக்காராய நம் தலைவர், முயன்று செய் பெரும் பொருள்-

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்