504 Agananooru
504

முயன்று ஈட்டும் பெரிய பொருள், நம் இன்று ஆயினும் வல்முடிக என - நாம் இல்லையாயினும் விரைந்து கைகூடுக என்று, பெருதுனி மேவல் - பெரிய வெறுப்பு மேவற்க;

11-15. நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சின்னீர்-வருத்த மிக்கு உதிர்ந்த நுண்ணிதாக வரும் சிறிதளவாய கண்ணீர், பல் இதழ் மழை கண் பாவை மாய்ப்ப-பலவாய இதழ்களையுடைய தாமரை மலர் போன்ற குளிர்ந்த கண்ணில் உள்ள கருமணியை மறைத்திட, பொன் ஏர் பசலை ஊர்தர-பொன்னை யொத்த பசலை பரந்திட, பொறி வரி நன் மா மேனி தொலைதல் நோக்கி - புள்ளிகளாய தேமலையுடைய நல்ல சிறந்த எனது மேனியின் அழகு தொலைதலைப் பார்த்து, இனையல் என்றி - வருந்தாதே என்கிறாய்;

15-21. தோழி-, பசு அரும்பு ஈன்ற சினைய-அழகிய அரும்பு களை ஈன்ற கிளைகளையுடைய, செம்முகை முருக்கின் அ போது அவிழ் அலரி கொழுதி - சிவந்த அரும்புகளையுடைய முருக்கமரத்தின் அழகிய போதுகள் விரிந்த மலர்களைக் கிண்டி, தாது அருந்து - அவற்றிலுள்ள பொடிகளை உண்டு, அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை-அழகிய தளிர்களையுடைய மாமரத்தின் அசையும் கிளைகளின் உச்சியிலிருக்கும், செம் கண் இரு குயில் - சிவந்த கண்ணினையுடைய கரிய குயில், நயவர கூஉம் இன் இள வேனிலும் - இனிமை தோன்றக் கூவும் இனிய இளவேனிற் காலத்திலும், இன்னே வருதும் எனத் தெளித்தோர்-இப்பொழுதே வருவேம் எனத் தெரிவித்துச் சென்றவர், வாரார்-வந்திலரே; என் செய்வேன்.

(முடிபு) ‘நல்கூர் குறுமகள்! குன்றம் போகிய பொய்வலாளர் முயன்று செய்பொருள் நம்மின்றாயினும் முடிக எனப் பெருந் துனி மேவல்; மேனி தொலைதல் நோக்கி, இனையல்’ என்றி; தோழி! இன்னே வருதும் எனத் தெளித்தோர் இன்னிள வேனிலும் வாரார்; என்செய்வேன்.

(வி - ரை.) முதுவேனிற் காலத்தின் ஞாயிற்றின் கதிர் முறுகுதலால் காட்டின் இடமெல்லாம் நீர் அற வறண்டமையைப், பருதியஞ் செல்வனுடைய ஆழி போழ்ந்தமையால் வறந்த தென்றார். ஆழி-ஆணை. குழவியை ஈன்றமையாலும் உணவு பெறாமையாலும் என்பு தோன்ற வற்றிய உடம்பினையுடைமையான், பிடிகள் கூரைசிதைந்த குரம்பைபோலத் தோன்றும் என்க. பெரும்பொருள், நம்மின்றாயினும் முடிக என்றது, நாம் இறந்துபடினும் அவர் அப் பெரும் பொருளைப் பெற்று வாழ்வாராக எனத் தலைவி துனிபற்றிக் கூறியதாகும். தோழியானவள் தலைவியை நோக்கி, நீ அங்ஙனம் கூறித் துனியுறாதே எனவும், மேனி தொலைதல் நோக்கி இனையல் எனவும் வற்புறுத்தினாளாக, தலைவி நீ அங்ஙனம் கூறித் துனியுறாதே எனவும், மேனி தொலைதல் நோக்கி இனையல் எனவும் வற்புறுத்தினாளாக, தலைவி நீ அங்ஙனம் வற்புறுத்தலாற் பயனென்ன? இன்னே வருதும் எனத் தெவித்துச் சென்றவர், இளவேனிற் பருவம் வந்தும்

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்