பாடல் எண்
973 எஃகு எ கூர்மை, வேல், கத்தி
974 எஃகுடை எழில் நுண்ணிய அழகு
975 எஃகுறுபஞ்சி - கடையப்பெற்ற பஞ்சு
976 எக்கர் - மணல்மேடு
977 எகினம் - அன்னம்
978 எண்கு - கரடி
979 எதிர்ச்சுளை - சுவைமிக்க சுளை
980 எதிர்மலர் - புதிய மலர்
981 எந்தை - எம் தலைவன்
982 எமியம் - தமியேம்
983 எய் - முள்ளம்பன்றி
984 எய்யாய - அறியாய்
985 எயில் - அரண், ஊர்
986 எயினர் - மறவர்
987 எரி - வெம்மை
988 எரிசினம் - எரியும் தீ
989 எருக்கிய - கொன்ற
990 எருத்தம் - தோள்
991 எருத்து - தோள், கழுத்து
992 எருவை-கழுகுஇ ஒருவகைப் பருந்து
993 எல் - ஒளி, இரவு, பகல்
994 எல்லா - முன்னிலைப்பெயர், கெழுதகைப் பொதுச்சொல்
995 எல்லி - இரவு
996 எல்லின்று - இருண்டுவிட்டது
997 எல்லினை - அழகுடையை
998 எல்லை - பகல்
999 எல்வளி - பெருங்காற்று
1000 எவ்வம் - துன்பம்
1001 எழால் - புல்லூறு
1002 எழல் - எழுச்சி
1003 எழில் நல்ம் - அழகின் நலம், எழுச்சியும் நலனும்
1004 எழலி - மேகம்
1005 எழு - கணையமரம்
1006 எழுதெழில்-எழுதுதறகேதுவாகிய எழில்
1007 எள்ளல் - இகழல்
1008 எறுழ் - வலிமை
1009 என்பாடு - என்பகுதி
1010 என்பு - என்று கூறுதல்
1011 என்றூழ - வெப்பம்
1012 என்னதும் எ சிறிதும்
1013 எனையதும் - சிறிதும்