பாடல் எண்
1210 குஞ்சரக்குரல குருகு - யானையங் குருகு எனும் புள்
1211 குஞ்சரம் - யானை
1212 குட்டம் - ஆழம்
1213 குடக்கு - மேற்கு
1214 குடச்சூல் - சிலம்பு, ஒருவகைச் சிலம்பு
1215 குடந்தை - குடவாயில்
1216 குடம்பை - கூட
1217 குடாஅது - மேற்கின் கண்ணுள்ளத
1218 குடிஞை-ஆந்தை, பேராந்தை
1219 குடுமி - ஆர்க்கு, தலை
1220 குடுமிக்கட்டி - தலைகவிந்த கட்டிகள்
1221 குடுமிச்சேவல்-செஞ்சூட்டுச்சேவல்
1222 குண்டு - ஆழம்
1223 குண்டைக்கோடு - குறிய கிளைகள்
1224 குணக்கு - கிழக்கு
1225 குணில் - குறந்தடி
1226 குப்பை-தொகுதி, நெற்குவியல்-
1227 குயம் - முலை
1228 குயில் எழுத்து-குயிற்றிய எழுத்து
1229 குயிலுதல் - இயற்றல், துளைத்தல்
1230 குயிறல் - பொறித்தல்
1231 குரங்கல் - வளைதல்
1232 குரம்பை - குடிசை
1233 குரல் - மயிர்த்தொகுதி, கொத்து, கதிர், பூங்கொத்து
1234 குரவு - குராமரம்
1235 குரவை தூங்கல் - குரவைக்கூத் தாடுதல்
1236 குராஅல் - கோட்டான்
1237 குர - நிறம்
1238 குகக-பறவை, நாரை, துருத்தி
1239 குரும்பி - புற்றாஞ்சோறு
1240 குருளை - கட்டி
1241 குரூஉ - விளக்கம்
1242 குலவு - விளவு
1243 குலாஅ - வளைந்த
1244 குலைஇய - வளைந்த
1245 குவவு-திரண்டு சிறுகுதல், திரட்சி
1246 குவவுத்திரை - வளைந்த அலைகள்
1247 குவை - திரட்சி
1248 குவைஇ - குவித்து
1249 குழவி - யானைக்கன்று
1250 குழிசி - குடம்
1251 குழுமல் - முழங்கல்
1252 குழை - தளிர்
1253 குழைச்செயலை-அசோகம் தளிர்
1254 குளகு - தழை, தழை உணவ
1255 குளவி - காட்டு மல்லிகை
1256 குளிர் - கிளிகடி கருவி
1257 குற்ற - பறிந்த
1258 குறங்கு - துடை
1259 குறுநெடுந்துணைய - சிறியவும் பெரியவுமாய அளவினையுடைய
1260 குறம்படை மழவர் - கோட்டை
1261 குறும்பறை பயிற்றி - குறுகக் குறுகப்பறத்தலைச் செய்து
1262 குறும்பு - கானவர் சீறூர்
1263 குறும்பொறை - சிறிய மலை, பாறை
1264 குறை - இன்றியமையாக் காரியம், (மீன்) துண்டம், தசை
1265 குறைத்த அறை - வெட்டி (நெறியாக்கிய) குன்றம்
1266 குறையோர் - வறியோர்
1267 குன்றி - குன்றிமணி