| | பாடல் எண் |
1388 |
செக்கர் - சிவப்பு |
20 |
1389 |
செங்குணக்கு - நேர்கிழக்கு |
76 |
1390 |
செங்கோல் - சிவந்த காம்பு |
121 |
1391 |
செச்சை எ வெட்சி |
48 |
1392 |
செஞ்சூட்டுக்குழை - சிவந்த மணிகள் பதித்த குழை |
86 |
1393 |
செண் - கொண்டடை |
59 |
1394 |
செத்தல் - கருதல் |
12 |
1395 |
செதுக்கை நீழல் - குறைந்த நீழல் |
151 |
1396 |
செதும்பல் - சேற்று நிலம் |
155 |
1397 |
செப்பு - சிமிழ |
25 |
1398 |
செம்பூழ் - சிவந்த குறும்பூழ் |
63 |
1399 |
செம்மல் - வாடற்பூ, தலைமை, செருக்கு |
14, 15, 66 |
1400 |
செயலை - அசோகு |
7 |
1401 |
செயிர் - குற்றம் |
66 |
1402 |
செருத்தல் - மடி |
14 |
1403 |
செல் - இடி |
342 |
1404 |
செல்சமம் - எதிர்ந்துவரும் போர் |
24 |
1405 |
செல்லல் - துன்பம் |
98 |
1406 |
செல்வம் - வீறு, மேம்பாடு |
155 |
1407 |
செவ்வழி - ஒரு பண், முல்லைப்பண் |
14 |
1408 |
செவி (செவ்வி) - ஏற்ற சமயம் |
235 |
1409 |
செற்றும் - செறியப் பெறுவோம் |
251 |
1410 |
செறித்து நிறுத்தல் - தேக்கிவைத்தல் |
304 |
1411 |
செறு - வயல் |
13 |
1412 |
செறுநர் - பகைவர் |
46, 66 |
1413 |
செறுவோர் - பகைவர் |
231 |
1414 |
சென்றீக - செல்லுக |
124 |