| | பாடல் எண் |
1614 |
நக - மகிழ, மலர |
21, 54 |
1615 |
நகர் - இல், மனை கோயில் |
15, 22, 20 |
1616 |
நகுகம் - நகுவேம் |
32 |
1617 |
நகுவர - விளங்கதல் உற |
206 |
1618 |
நகை - ஒளி |
244 |
1619 |
நசை - வேட்கை |
199 |
1620 |
நடுங்கம் - நெகிழும் |
320 |
1621 |
நண்ணார் - பகைவர் |
124 |
1622 |
நணித்து - அணித்து |
254 |
1623 |
நத்துறந்து (நம்துறந்து) நம்மைத் துறந்து |
183 |
1624 |
நப்புலந்து - (நம்புலந்து) நம்மை வெறுத்து |
174 |
1625 |
நம்பி - விரும்பி |
146 |
1626 |
நயந்து - விரும்பி |
198 |
1627 |
நயவர - அன்பு தோன்ற |
11 |
1628 |
நயவரு சீறியாழ-இனிமை பொருந்திய சிறிய யாழ |
279 |
1629 |
நயவன் - யாழவல்லோன் |
212 |
1630 |
நயன் - நன்றியறிவு, நடுநிலை |
71 |
1631 |
நரந்தம் - நாரத்தை, ஒரு புல் |
141, 266 |
1632 |
நரலல் - ஒலித்தல் |
47 |
1633 |
நரறல் - ஒலித்தல் |
72 |
1634 |
நரை - நரைமயிர் |
254 |
1635 |
நல்கல் - அருளல் |
113 |
1636 |
நல்குநர் - கொடையாளர் |
30 |
1637 |
நல்கூர்தல் - வறுமைப்படல் |
87 |
1638 |
நல்நிலை - நல்ல வெற்றிநிலை |
179 |
1639 |
நல்லரா - நல்ல பாம்பு |
72 |
1640 |
நல்வாங்கு - நன்மை பொருந்திய |
198 |
1641 |
நலிதல் - வருத்துதல் |
66 |
1642 |
நவ்வி - இளைய மான் |
7 |
1643 |
நவிரல் - குலைதல் |
1 |
1644 |
நவிலா - திருந்தாத |
229 |
1645 |
நவின்று - பயின்று |
218 |
1646 |
நவை - குற்றம் |
145 |
1647 |
நவைத்தல் - துன்புறுத்தல் |
262 |
1648 |
நள்ளென் கங்குல் - நள்ளென்னும் ஒலியினையுடைய நடுஇரவு |
128 |
1649 |
நள்ளென் யாமம் - இருள் செறிந்த நடுஇரவு |
170 |
1650 |
நளி - பெருமை, செறிவு |
132, 228 |
1651 |
நளித்தல் -செறிதல் |
188 |
1652 |
நளிப்பு - மரச்செறிவு |
18 |
1653 |
நளிபெயல் - மிக்கபெயல் |
72 |
1654 |
நளிர் - களிர்ச்சி |
242 |
1655 |
நறவு - நறவம்பூ, கள் |
19, 196 |
1656 |
நறை - தேன்கூடு, நறைக்கொடி |
242, 282 |
1657 |
நன்று - பெரிது |
99 |
1658 |
நன்னராட்டி - நன்மையையுடையாள் |
165 |
1659 |
நன - அகன்ற |
19 |
1660 |
நனவு-ஆடுகளம், விழிப்பு |
82, 158 |
1661 |
நனி - மிக்க |
235 |
1662 |
நனை - கள், அரும்பு, தாது |
23, 25, 18 |
1663 |
நனைத்த - அரும்பிய |
150 |