பாடல் எண்
1747 பகடு - எருது, எருமை, கடா, விளக்கம்
1748 பகர்நர் - விற்பார்
1749 பகல் - பிளத்தல்
1750 பகழி - அம்பு
1751 பகன்றை - ஒருகொடி, சிவதை
1752 பகாஅர் - பகர்வார், விற்பார்
1753 பகை - பகுப்பு
1754 பங்கனி முயக்கம் - பங்குனிவிழா
1755 பச்சை - தோல்
1756 பசுங்காழ - பசிய சரத்தால் ஆகிய (மேகலை)
1757 பசுநனை - புதியதேன்
1758 பசுமை - அழகு, குளிர்ச்சி
1759 பசை - கஞ்சிப்பசை
1760 பஞ்சி - பஞ்சு
1761 பட்டம் - ஒடை
1762 படப்பை - தோட்டம்
1763 படர் - துன்பம் , நினைவு
1764 படர்தல் - நினைதல்
1765 படலை - தழைப்பரப்பு, இலை
1766 படாஅர் - செடி, சிறுதூறு
1767 படிமம் - பாவை
1768 படியோர் - (படியார் வணங்கார்)
1769 படிவம் - விரதம்
1770 படுசினை - தாழந்த கிளை
1771 படுசுடர் அமையம் - ஞாயறு மறையும் பொழுது, ஒளி மழுங்கம் நேரம்
1772 படுஞெமல் - மிக்க சருகுகள்
1773 படுதல்- ஒலித்தல், துயிலல்
1774 படை - கலனை
1775 பண்ணை - ஒருவகைக்கீரை
1776 பணையான் - சாணைபடிக்கிறவன்
1777 பத்தல் - நீர்முகக்குங் கருவி
1778 பதம் - உணவு
1779 பதவு - அறுகம்புல், அறகங்கிழங்கு
1780 பதன் - செவ்வி
1781 பதுக்கை - கற்குவியல்
1782 பம்பல் - செறிதல்
1783 பயம் - வளம், பால், நீர், பீடு
1784 பயம்பு - பள்ளம், யானைபிடிக்கும் குழி
1785 பயிர்தல் - அழைத்தல், அகவல்
1786 பயிர்ந்து அகவும் - அழைத்துக் கூப்பிடும்
1787 பயிரும் - ஒலிக்கம்
1788 பயிர்தல் - அழைத்தல்
1789 பயிற்றல் - பலகாலுங்கூறல், தோற்றுவித்தல்
1790 பயின் - அரக்கு
1791 பயின்று வருதல் - அடுத்தடுத்து வருதல்
1792 பரத்தன் - பரத்தமைத் தொழி லுடையவன்
1793 பரல் - பரற்கல், வத்து, பாறைக்கல்
1794 பரவை - பரப்பு
1795 பரி - செலவு, வேகம் , யாற்றியல் அணை கோலுவார் நிறுத்தம் குதிரை மரம்
1796 பரித்தல் - பரத்தல், சூழ்தல், செலுத்தல், ஒடித்தல்
1797 பரிதல் - வருந்துதல்
1798 பருதுரை - பராரை
1799 பருதி - ஞாயிறு, உருள்
1800 பருவரல் - வருந்தல், துன்பம்,
1801 பரைஇ - வணங்கி, பரவி
1802 பல்லியம் - பலவாகிய வாச்சியம்
1803 பலவுக்காய் - பலாக்காய்
1804 பவர் - கொடி
1805 பழச்சுதல் - வணங்குதல்
1806 பழுநி - முதிர்ந்து
1807 பழுப்பயன் - பழமாய பயன், பழுத்த பழம்
1808 பழையர் - நெய்தல் நில மாக்கள்
1809 பறந்தலை - பாழ இடம்
1810 பறழ் - குட்டி
1811 பறி - குடலை
1812 பறித்தல் - சூழ்தல்
1813 பறித்து இடல் - ஒடித்துப் போடல்
1814 பறை - முழவு , பறித்தல், சிறகு
1815 பறைஇய - பறத்தற்கு
1816 பறைக்கண் - பறிந்த இடம்
1817 பறைந்து - மோதி
1818 பறைதல் - தேய்தல், நழுவல்
1819 பறைய - தேய, கழல
1820 பனி - நடுக்கம், நீர்
1821 பனிக்கும் - வருத்தும், நடுங்கச் செய்யும்
1822 பனிச்சை - அளகம்
1823 பனிநீங்கும் வழநாள் - பனிக்காலம் கழந்த பின்னாளாகிய இளவேனிற் காலம்