| | பாடல் எண் |
1876 |
புகர் - புள்ளி |
12 |
1877 |
புகல் - விருப்பு, செருக்கு |
89, 159 |
1878 |
புகவு - உணவு |
132 |
1879 |
புகற்சி - விருப்பம் |
252 |
1880 |
புகாஅர் - துறைமுகம் |
190 |
1881 |
புகார் - காவிரிப்பூம்பட்டினம், கழி முகம் |
110, 181 |
1882 |
புட்டாளத்திரி-புண்ணுற்றதாளினை யுடைய கோவேறு கழுதை |
120 |
1883 |
புடையல் - ஒலித்தல் |
295 |
1884 |
புணரி - கடல் அலை, அலை |
65, 190 |
1885 |
புணர்பு பிரிந்து இசைத்தல் - இணைந்தும் தனித்தும் கூறல்(அலர்) |
62 |
1886 |
புணை - தெப்பம் |
6 |
1887 |
புதவு-வாய்த்தலை, வாயில் |
83, 237 |
1888 |
புய்க்கும் - பறிக்கம் |
252 |
1889 |
புரத்தல் - காத்தல் |
97 |
1890 |
புரவலன் - அரசன் |
32 |
1891 |
புரிசை - மதில் |
114 |
1892 |
புரிதல் - விரும்புதல் |
154 |
1893 |
புரிபு - விருப்பம் |
205 |
1894 |
புருவைப் பன்றி - இளமைப் பன்றி |
88 |
1895 |
புரை - உயர்ச்சி |
265 |
1896 |
புரைதல் - ஒத்தல், பொருந்துதல், உயர்தல் |
15, 95 |
1897 |
புரையோர் - உயர்ந்தோர் |
136 |
1898 |
புல் - உகம்புல், பனையோலை,மூங்கில் |
39 |
1899 |
புல்வாய் - மான் |
284 |
1900 |
புலத்தல் - வெறுத்தல் |
85 |
1901 |
புலம்பன் - நெய்தற்றலைவன் |
270 |
1902 |
புலம்பு - வருத்தம், தனிமை, கடற்கரை |
4, 7, 10 |
1903 |
புலர்குரல் - முற்றின ஏனல் |
82 |
1904 |
புலர - காய, புலால் நாற |
72, 172 |
1905 |
புலத்தி - ஆடை ஒலிப்பவள் |
34 |
1906 |
புழல் - துளை |
9 |
1907 |
புழகு - அம்பின் தலைக்குப்பி |
9 |
1908 |
புள் - பறவை, புட்கள், நிமித்தம் |
20, 176, 2 |
1909 |
புறக்கு - புறம் |
139 |
1910 |
புறந்தரல் - பாதுகாத்தல் |
35 |
1911 |
புறந்தை - புறையாறு |
100 |
1912 |
புறம் - இடம், உடம்பு, முதுகு |
84, 86 |
1913 |
புறவு - முல்லைநிலம் , காடு |
33, 84 |
1914 |
புறனிலை - தாழ்ந்து பின்னிற்றல் |
32 |
1915 |
புன்கண் - துன்பம் |
47 |
1916 |
புன்பைதலை - பெரிய துன்பம் |
126 |
1917 |
புன்கம் - சோறு |
237 |
1918 |
புனவன் - குறவன் |
140 |
1919 |
புனிறு - ஈன்ற அண்மை |
21 |