பாடல் எண்
2100 முகவை - முகக்கப்பட்ட நீர்
2101 முகிழ் - அரும்பு
2102 முகை - அரும்பு, முழைஞ்சு, குகை
2103 முச்சி - கொண்டை, கூந்தலின் முடி
2104 முடங்கர் - முடக்கிடம்
2105 முடவு - முடம், வளைவு
2106 முண்டகம் - நீர்முள்ளி
2107 முணங்குநிமிர்தல்- மூரிநிமிர்தல்
2108 முதல் - அடி
2109 முதுமை - அறிவு
2110 முதுநீர் - கடல்
2111 முதுபாழ் - மிக்கபாழிடம்
2112 முதை - பழைமை
2113 முதைச்சுவல் - கொல்லையாகிய மேட்டு நிலம்
2114 முதைப்பனம்-முற்றிய தினைப்புனம்
2115 முரண் - வலிமை, மாறுபாடு
2116 முரம்பு - மேட்டுநிலம், கற்குவியல், வன்னிலம்
2117 முரவல் - ஒலித்தல்
2118 முரவு - முரிவு
2119 முரவு வாய் முதுபுள் - முழங்கும் வாயினையுடைய பேராந்தை
2120 முருக்கு - செம்முருக்கு
2121 முருங்காக் கலிங்கம் - கசங்காத புத்துடை
2122 முருந்து - குருத்து, மயிலிறகின் அடி
2123 முழம் - முழங்கால்
2124 முழுநெறிப்பூ - இதழ் ஒடியாத பூ
2125 முள் - தாற்றுக்கோல்
2126 முள்கல் - பதிதல்
2127 முள்ளி - நீர்முள்ளி
2128 முளரி - தாமரை
2129 முளரித்தீ - காட்டுத்தீ
2130 முளவுமா - முள்ளம்பன்றி
2131 முளிந்த - காய்ந்த
2132 முளிபுல் - மூங்கில்
2133 முற்றுதல் - சூழ்தல்
2134 முறி - தளிர்
2135 முன்பு - வலிமை
2136 முன்றுறை - துறைமுகம்
2137 முன்னம் - குறிப்பு
2138 முனை - பகைப்புலம்
2139 முனைதல் - வெறுத்தல்