133

(வி - ரை.) விருந்தின் மன்னர் - புதியராய் மாறேற்ற அரசர். வேந்தனும் பகை தணிந்தனன் என்றமையால் தலைவன் வேந்தற் குற்றுழிப் பிரிந்தானாயிற்று. நச்சினார்க்கினியர் கருத்தின்படி இஃது அந்தணன் தூதிற் பிரிந்ததாகும் என்க. உள்ளுறுதல் நிலத்தின் ஈரத் தால் என்க.

குழவி பாலுண்ண வேண்டி என்பார் குழவியிடத்து வீங்குசுரை மடிய என்றார்.

கொடுமடி - அடகு பறித்திடுதற்கு வளைத்துக்கட்டிய மடி. சிறு குடி - காவிரியின் வடவயினுள்ளதோர் ஊர். திங்கள் : விளி, என் மகன் ஒற்றி -என்மகன் நினைக்க என்றுமாம். இங்கு ஒற்ற எனத் திரிக்க.

(மே - ள்.) 1'திணைமயக் குறுதலும்’ என்னுஞ் சூத்திரத்து. ‘இச் செய்யுள் கார்காலத்து மீள்கின்றான், முகிழ்நிலாத் திகழ்தற்குச் சிறந்த வேனி லிறுதிக்கண் தலைவிமாட்டு நிகழ்வன கூறி, அவை காண்டற்குக் கடிது தேரைச் செலுத்தென்றது: இது முல்லைக்கண் வேனில் வந்தது’ என்றும், 2'அவற்றுள் ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன’ என்னுஞ் சூத்திரத்து ‘இப்பாட்டில், வேந்தன் பகைமையைத் தான் தணி வித்தமை கூறலின் அந்தணன் தூதிற் பிரிந்தமை பெற்றாம்’ என்றும் கூறினர், நச்.

55. பாலை

[புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியாக்கு உரைத்தது.]

காய்ந்துசெலற் கனலி கல்பகத் தெறுதலின்
நீந்து குருகுருகும் என்றூழ நீளிடை
உளிமுக வெம்பரல் அடிவருத் துறாலின்
விளிமுறை அறியா வேய்கரி கானம்

5. 

வயக்களிற் றன்ன காளையொ டென்மகள்
கழிந்ததற் கழிந்தன்றோ இலனே யொழிந்தியான்
ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த் தசைஇ
வேலது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேஎண் கனவ ஒண்படைக்

10. 

கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்


1. தொல். அகத்: 12.

2. தொல். அகத்: 26.