212

கொடுப்பினும் கொள்ளாராதலால் அவர்கள் அன்பிற்கம் உரிமையாகுக என்றாள் எனலுமாம்.

(உ-றை.) மூத்தோர் இளையோரை வருத்தாரன்றே, அது செய்யாது புணரி இளையோர் மனை சிதைத்தாற்போல, பெரிய அறிவுடைய நீர் சிறியேமாகிய எங்களை வருத்தாநின்றீர் என்றவாறு.

(மே - ள்.) 1'நாற்றமும் தோற்றமும்’ என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள், ‘பொருள் மிகக் கொடுத்தல் வேண்டுமென்றது’ என்றனர், நச்.

91. பாலை

[பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறத்தியது.]

விளங்குபகல் உதவிய பல்கதிர் ஞாயிறு
வளங்கெழு மாமலை பயங்கெடத் தெறுதலின்
அருவிய யான்ற பெருவரை மருங்கில்
சூர்ச்சுனை துழைஇ நீர்ப்பயங் காணாது

5. 

பாசி தின்ற பைங்கண் யானை
ஓய்பசிப் பிடியோ டொருதிறன் ஒடுங்க
வேய்கண் ணுடைந்த வெயிலவிர் நனந்தலை
அரும்பொருள் வேட்கையின் அகன்றன ராயினும்
பெரும்பே ரன்பினர் தோழி இருங்கேழ்

10. 

இரலை சேக்கும் பாலுயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவுழ வெழுந்த
நெடுங்கால் ஆசினி ஒடுங்காட் டும்பர்
விசிபிணி முழவின் குட்டுவன் காப்பப்
பசியென வறியாப் பணைபயில் இருக்கைத்

15. 

தடமருப் பெருமை தாமரை முனையின்
முடமுதிர் பலவின் கொழுநிழல் வதியும்
குடநாடு பெறினும் தவிரலர்
மடமான் நோக்கிநின் மாணலம் மறந்தே.

-மாமூலனார்.

(சொ - ள்.) 1-9. தோழி-, விளங்கு பகல் உதவிய பல் கதிர் ஞாயிறு - உலகம் விளங்கற்குக் காரணமாகிய பகலினைத் தந்த பல


1. தொல். களவு: 23.