பக்கம் எண் :

களிற்றியானை நிரை3

ராது பிறிதொருவாய்பாட்டாற்றொடுப்பினும் பொருட்டொடர்புஉண்டாயிற் பொருள் இயையும் வழி அசைச்சொற்கள்திரியாது நின்ற நிலையே பொருள்படும்’ என்று கூறிஅதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டி, ‘இதற்குக்கொன்றையா லமைந்த தாரினனாய் மாலையனாயகண்ணியனாய் நுண்ஞாண் மார்பினனாய் இமையாநாட்டத்து நுதலினனாய்க் கணிச்சி மழுவுமூவாய்வேலும் ஏந்திய கையினனாய் யாவர்க்குந்தோலா தோனுமாய் ஏற்றினையு மூர்ந்து உமையானையுஞ்சேர்ந்து செவ்வானன்ன மேனியையும் பிறைபோன்றஎயிற்றினையும் எரிபோன்ற சடையினையும்திங்களொடு சுடருஞ் சென்னியையு முடையனாய் மூவாஅமரர் முதுலிய யாவருமறியாத் தொன்முறைமரபினனாய்ப் புலியதளையுமுடுத்த, யாழ்கெழுமணிமிடற் றந்தணனது சிவானுபூதியிற் பேருலகம்தங்கிற்று எனப் பொருள் உரைக்குங் காலத்து அதன்கண் இடைக்கிடந்த சொற்கள் முன்னொடு பின்வாய்பாடுகள் சேராவன்றே; அவ்வழிஅவ்வாய்பாட்டாற் போந்த பொருளுரைப்பச்சேர்ந்தவாறும் இசைதிரிந் திசைத்தவாறும் அவைதத்தம் நிலையிற் குலையாமை நின்றுபொருள்பட்டவாறுங் கண்டு கொள்க,’என்றுரைத்தனர், இளம்பூரணர். ‘வாழ்த்தியல்வகையே நாற்பாற்கு முரித்தே’1என்னும் சூத்திரவுரையில், இச்செய்யுளை எடுத்துக்காட்டி, இஃது உலகிற்குப் பயன்பட வாழ்த்தியதுஎன்றார், பேராசிரியர்.


1. தொல். செய்யு: 109.