மலை; பழனி, ‘நெடுவே ளாவி, பொன்னுடை நெடுநகர்ப் பொதினி’ (61) எனவும், ‘சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கற்போல்’ (356) எனவும் பின்னர் வருவன அறியற் பாலன. (மே - ள்.) ‘முதல் கரு உரிப்பொருள்’1 என்னுஞ் சூத்திரவுரையில் இச் செய்யுளை எடுத்துக்காட்டி, பாலைக்கு முதலுங் கருவும் வந்து முதற் பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது என்றார். நச். 2. குறிஞ்சி [பகற்குறிக்கட் செறிப்பறிவுறீ இத் தோழி வரைவு கடாயது.] | கோழிலை வாழைக் கோண்மிகு2 பெருங்குலை ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த சாரற் பலவின் சுளையொ டூழ்படு பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல் | 5. | அறியா துண்ட கடுவன் அயலது கறிவளர் சாந்தம் ஏறல்செல் லாது நறுவீ அடுக்கத்து மகிழந்துகண் படுக்கும் குறியா இன்பம் எளிதின் நின்மலைப் பல்வேறு விலங்கும் எய்து நாட | 10. | குறித்த இன்பம் நினக்கெவன் அரிய வெறுத்த வேஎர் வேய்புரை3 பணைத்தோள் நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட் டிவளும் இனைய ளாயின் தந்தை அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக் | 15. | கங்குல் வருதலும் உரியை பைம்புதல் வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே. | | -கபிலர் |
(சொ - ள்.) 1-9. கோழ இலை வாழைக் கோள்மிகு பெருங்குலை ஊழ்ஊறு தீங்கனி - வளவிய இலைகளையுடைய வாழையின் காய்த்தல் மிக்க பெரிய குலையிலுள்ள முதிர்ச்சியுற்ற இனிய கனியாலும், உண்ணுநாத் தடுத்த சாரற் பலவின் ஊழ்படு சுளையொடு-தம்மை
1. தொல். அகத்: 3. (பாடம்) 2. கோண் முதிர். 3. வேய்மருள். |