|
|
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு |
|
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின், |
|
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் |
|
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது, |
5 |
பாசி தின்ற பைங் கண் யானை |
|
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க, |
|
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை |
|
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும், |
|
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ் |
10 |
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக் |
|
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த |
|
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர், |
|
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப, |
|
பசி என அறியாப் பணை பயில் இருக்கை, |
15 |
தட மருப்பு எருமை தாமரை முனையின், |
|
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும், |
|
குடநாடு பெறினும் தவிரலர் |
|
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே. |
|
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் |
| உரை |
|
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி, |
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச் |
|
செங் கண் இரும் புலி குழுமும் சாரல் |
5 |
வாரல் வாழியர், ஐய! நேர் இறை |
|
நெடு மென் பணைத் தோன் இவளும் யானும் |
|
காவல் கண்ணினம் தினையே; நாளை |
|
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் |
|
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண், |
10 |
தண் பல் அருவித் தாழ்நீர் ஒரு சிறை, |
|
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் |
|
திருமணி விளக்கின் பெறுகுவை |
|
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே. |
|
இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தோழி வரைவு கடாயது.- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் |
|
உரை |
|
கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும், |
|
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும், |
|
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து; |
|
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர் |
5 |
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன |
|
பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும் |
|
செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்; |
|
அரண் பல கடந்த, முரண் கொள் தானை, |
|
வாடா வேம்பின், வழுதி கூடல் |
10 |
நாள் அங்காடி நாறும் நறு நுதல் |
|
நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு, |
|
வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர், |
|
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை |
|
நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து, |
15 |
நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப, |
|
முயங்குகம் சென்மோ நெஞ்சே! வரி நுதல் |
|
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து, |
|
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி, |
|
ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை, |
20 |
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை |
|
திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை. |
|
தெண் நீர் உயர் கரைக் குவைஇய |
|
தண் ஆன்பொருநை மணலினும் பலவே. |
|
வினை முற்றி மீளலுறும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கணக்காயனார் மகனார் நக்கீரனார் |
|
உரை |
|
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய |
|
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய, |
|
வான் எனப் பூத்த பானாட் கங்குல், |
|
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன் |
5 |
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ, |
|
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன், |
|
ஐது படு கொள்ளி அங்கை காய, |
|
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி |
|
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய, |
10 |
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் |
|
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் |
|
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து |
|
|
|
இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே! |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச் சிறு மேதாவியார் |
|
உரை |
|
பைபயப் பசந்தன்று நுதலும்; சாஅய், |
|
ஐது ஆகின்று, என் தளிர் புரை மேனியும்; |
|
பலரும் அறியத் திகழ்தரும், அவலமும்; |
|
உயிர் கொடு கழியின் அல்லதை, நினையின் |
5 |
எவனோ? வாழி, தோழி! பொரிகால் |
|
பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற |
|
ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ, |
|
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க, |
|
ஈனல் எண்கின் இருங் கிளை கவரும் |
10 |
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார், |
|
கௌவை மேவலர்ஆகி, ''இவ் ஊர் |
|
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ |
|
புரையஅல்ல, என் மகட்கு'' எனப் பரைஇ, |
|
நம் உணர்ந்து ஆறிய கொள்கை |
15 |
அன்னை முன்னர், யாம் என், இதற் படலே? |
|
போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குத் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார் |
|
உரை |
|
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து, |
|
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும் |
|
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின் |
|
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி |
5 |
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி, |
|
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை |
|
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும் |
|
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர! |
|
''ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து |
10 |
கொண்டனை'' என்ப ''ஓர் குறுமகள்'' அதுவே |
|
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின், |
|
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை, |
|
அண்ணல் யானை அடு போர்ச் சோழர், |
|
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை, |
15 |
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய, |
|
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை, |
|
களிறு கவர் கம்பலை போல, |
|
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே. |
|
தோழி வாயில் மறுத்தது. மருதம் பாடிய இளங்கடுங்கோ |
|
உரை |
|
''கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை |
|
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து, |
5 |
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் |
|
கொலை வில் ஆடவர் போல, பலவுடன் |
|
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் |
|
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும், |
|
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த |
10 |
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு |
|
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி, |
|
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான் |
|
வயலை வேலி வியலூர் அன்ன, நின் |
|
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து, |
15 |
ஆழல்'' என்றி தோழி! யாழ என் |
|
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து, |
|
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் |
|
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை, |
|
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி, |
20 |
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து |
|
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர், |
|
புகை புரை அம் மஞ்சு ஊர, |
|
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே? |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் |
|
உரை |
|
பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன், |
|
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த |
|
இனிய உள்ளம் இன்னாஆக, |
|
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம் |
5 |
சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல் |
|
அறிநதனள் அல்லள், அன்னை; வார்கோல் |
|
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி, |
|
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப் |
|
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ, |
10 |
''முருகன் ஆர் அணங்கு'' என்றலின், அது செத்து, |
|
ஓவத்தன்ன வினை புனை நல் இல், |
|
''பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் |
|
பண்டையின் சிறக்க, என் மகட்கு'' எனப் பரைஇ, |
|
கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து, |
15 |
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர், |
|
வெண் போழ் கடம்பொடு சூடி, இன் சீர் |
|
ஐது அமை பாணி இரீஇ, கைபெயரா, |
|
செல்வன் பெரும் பெயர் ஏத்தி, வேலன் |
|
வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன் |
20 |
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின், |
|
என் ஆம்கொல்லோ? தோழி! மயங்கிய |
|
மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக |
|
ஆடிய பின்னும், வாடிய மேனி |
|
பண்டையின் சிறவாதுஆயின், இம் மறை |
25 |
அலர் ஆகாமையோ அரிதே, அஃதான்று, |
|
அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி, |
|
வெறி கமழ் நெடு வேள் நல்குவனெனினே, |
|
''செறிதொடி உற்ற செல்லலும் பிறிது'' எனக் |
|
கான் கெழு நாடன் கேட்பின், |
30 |
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளைச் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக்கண்ணியார் |
|
உரை |
|
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன |
|
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் |
|
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில் |
|
மாண் இழை மகளிர் பூணுடை முலையின் |
5 |
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை |
|
அதிரல் பரந்த அம் தண் பாதிரி |
|
உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ |
|
மராஅ மலரொடு விராஅய், பராஅம் |
|
அணங்குடை நகரின் மணந்த பூவின் |
10 |
நன்றே, கானம்; நயவரும் அம்ம; |
|
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை |
|
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின், |
|
பிடி மிடை, களிற்றின் தோன்றும் |
|
குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே! |
|
உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |
|
உரை |
|
அரையுற்று அமைந்த ஆரம் நீவி, |
|
புரையப் பூண்ட கோதை மார்பினை, |
|
நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து, |
|
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே. |
5 |
பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த |
|
கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த |
|
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் |
|
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை, |
|
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த |
10 |
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் |
|
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான், |
|
பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப் |
|
புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை |
|
வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன |
15 |
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் |
|
வைகுறு விடியல் போகிய எருமை |
|
நெய்தல் அம் புது மலர் மாந்தும் |
|
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே! |
|
தோழி வரைவு கடாயது. - உலோச்சனார் |
|
உரை |
|