னென்னும் அதிகாரப்புறநடையான் இந்நிகரன வெல்லாம் அமைத்துக்கொள்க' (தொல். விளி. சூ. 35, தெய்வச்.) ; யகாரவீறு சேய்மைக்கண் அளபெடுத்தல் விளியுருபாமெனக் கூறி இவ்வடிகளை மேற்கோளாகக் காட்டினர்; (இ. வி. சூ. 212, உரை) . "விளங்குமணிக் கொடும்பூணாய்" என விளியேற்றது; நேமி. சொல், 28. 3. மலையைப்பாடுதல் : புறநா. 131 : 3, 143 : 12; "தாங்கரு மரபிற் றன்னுந் தந்தை, வான்பொரு நெடுவரை வளனும் பாடி" (சிறுபாண். 127 - 8, குறிப்புரை) 3 - 5. புறநா. 129 : 6, குறிப்புரை. (130) 131 | மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன் வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன் குன்றம் பாடின கொல்லோ களிறுமிக வுடையவிக் கவின்பெறு காடே. |
திணையும் துறையும் அவை. அவனை அவர் பாடியது. (இ - ள்.) முகிலினம் சென்று தங்கும் உயர்ந்தமலைக்குத் தலைவன், சுரபுன்னைப் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியினையும் வாய்த்த (வாய்த்த-தப்பாத) வாளினையுமுடைய அண்டிரனது மலையைப் பாடினவோ களிறுகளை மிகவுமுடைய இந்தக் கவினையுடைய காடு?-எ - று. யானைக்குப் பிறப்பிடமாயிருக்கிற காட்டினும் அண்டிரனைப் பாடி னோர், யானை மிகவுமுடையரென்று அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறு. ஆய்க்கு அண்டிரனென்பதும் ஒரு பெயர். (கு - ரை.) 3. புறநா. 130 : 3, குறிப்புரை. 4. புறநா. 129 : 6, குறிப்புரை. களிறு - ஆண்யானையின் பெயராக இருப்பினும் இங்கே யானைக்குப் பொதுப் பெயராயிற்று. (131) 132 | முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே ஆழ்கென் னுள்ளம் போழ்கென் னாவே பாழூர்க் கிணற்றிற் றூர்கவென் செவியே நரந்தை நறும்புன் மேய்ந்த கவரி | | 5 | குவளைப் பைஞ்சுனை பருகி யயல தகரத் தண்ணிழற் பிணையொடு வதியும் வடதிசை யதுவே வான்றோ யிமயம் தென்றிசை யாஅய்குடி யின்றாயிற் பிறழ்வது மன்னோவிம் மலர்தலை யுலகே. |
(பி - ம்.) 1 ‘பின்னுள்ளின் யானே’
|