‘மனையோள் கூந்தனோக்கி’ என்பதற்கு, ‘பாண! என் மனைவியது சரியும் மயிரை நோக்கி’ எனவும், ‘புரவுத்தொடுத்து’ என்பதற்கு ‘அன்று உம்மைப் புரந்த பரிசைப் பாடி’ எனவும் உரைப்பாரும் உளர். (கு - ரை.) 2. விளரி, நெய்தற்குரித்தாகலின், இரங்கற்பண்ணாயிற்று. 15 - 9. "வாள்வாயு மின்றி வடிவெங்கணை வாயு மின்றிக், கோள்வாய் மதிய நெடியான்விடுத் தாங்கு மைந்தன், தோள்வாய் சிலையினொலியாற்றொறு மீட்டு மீள்வான், நாள்வாய் நிறைந்த நகைவெண்மதி செல்வ தொத்தான்” (சீவக.454) 20 - 21. "படநாகந் தோலுரித்தாற் போற்றுறந்து”, ‘’பாம்புரிபோன் முற்றத் துறந்து” (சீவக. 1546, 3039) 23. புறநா. 4: 6, 169: 10 - 11. 25 - 8.புறநா. 249: 12- 4; 264: 1 - 4. மு.ஆபெயர்த்துத்தருதலென்னும் துறைக்கு மேற்கோள்காட்டி, ‘இதனுள் தன்னூரென்றலிற் குறுநிலமன்னன் நிரைமீட்டுப் பட்ட நிலையைப் பாணர் கையற்றுக்கூறியது’ என்பர்; தொல். புறத்திணை. சூ. 5, ந. (260) 261 | அந்தோ வெந்தை யடையாப் பேரில் வண்டுபடு நறவிற் றண்டா மண்டையொடு வரையாப் பெருஞ்சோற்ற முரிவாய் முற்றும் வெற்றியாற் றம்பியி னெற்றற் றாகக் | | 5 | கண்டனென் மன்ற சோர்கவென் கண்ணே வையங் காவலர் வளங்கெழு திருநகர் மையல் யானை யயாவுயிர்த் தன்ன நெய்யுலை சொரிந்த மையூ னோசை புதுக்கண் மாக்கள் செதுக்க ணாரப் | | 10 | பயந்தனை மன்னான் முன்னே யினியே பல்லா தழீஇய கல்லா வல்வில் உழைக்குரற் கூகை யழைப்ப வாட்டி நாகுமுலை யன்ன நறும்பூங் கரந்தை விரகறி யாளர் மரபிற் சூட்ட | | 15 | நிறையிவட் டந்து நடுக லாகிய வென்வேல் விடலை யின்மையிற் புலம்பிக் கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய கழிகல மகடூஉப் போலப் புல்லென் றனையாற் பல்லணி யிழந்தே. |
|