பக்கம் எண் :

438

5. "கற்கொலோ சோர்ந்திலவெங் கண்” (பு. வெ. 31)

6. வளங்கெழு திருநகர்: புறநா. 250: 6.

7. "மையல் யானையின் மருட்டலு மருட்டினன்” (கலித். 54: 14)

9. செதுக்கண்: கலித். 68: 3.

17. புறநா. 250: 4 - 5, 280: 11 - 4.

18. புறநா. 238: 6, 280: 14. 19. புறநா. 250: 6.

‘கரந்தையாவது தன்னுறு தொழிலாக நிரைமீட்டோர் பூச்சூடுதலிற் பெற்ற பெயராதலின் வெட்சித்திணைபோல ஒழுக்கமன்று; அந்தோ வெந்தையென்னும் புறப்பாட்டினுள், நாகுமுலை யன்ன நறும்பூங் கரந்தை, விரகறியாளர் மரபிற் சூட்ட, நிரையிவட் டந்து என்றவாறு காண்க’ (தொல். புறத்திணை. சூ. 5, .)

(261)

262

நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்
பாசுவ லிட்ட புன்காற் பந்தர்ப்
புனறரு மிளமண னிறையப் பெய்ம்மின்
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று
5நிரையொடு வரூஉ மென்னைக்
குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.

(பி - ம்.) 2 ‘பைங்கால்’

திணை - வெட்சி; துறை - உண்டாட்டு; தலைத்தோற்றமுமாம்.

............................மதுரைப் பேராலவாயார் பாடியது.

தலைத்தோற்றமாவது:-

‘’உரவெய்யோ னினந்தழீஇ

வரவுணர்ந்து கிளைமகிழ்ந்தன்று” (பு. வெ.12)

(இ - ள்.) மதுவையும் அலைத்துண்ணும்படி பிழிமின்; ஆட்டுவிடை யையும் படுமின்; பசிய தழையாலே வேயப்பட்ட புல்லிய காலையுடைய பந்தரின்கண் நீர் கொழித்து (பி - ம். கழித்து) க் கொடுவரப்பட்ட இளைய மணலை நிரம்பப் பரப்புமின்; பகைவரது தூசிப்படையை முறித்துப் பெயர்ந்துபோகிற தனது படைக்குப்பின்னே நின்று நிரையுடனே வருகின்ற என் இறைவனுக்குப் பக்கமறவராய் நிரைகொண்டுவருவோர் அவன் றன்னினும் பெரிய இளைப்பையுடையர்-எ - று.

சாயல் - விடாயாலுண்டான மென்மை.

என்னைக்கு உழையோர் தன்னினும் பெருஞ்சாயலர்; அவர்க்கு நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; பெய்ம்மினெனக்கூட்டுக.

(கு - ரை.) 1. "மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடை” (முருகு. 232) ; "மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி” (பெரும்பாண். 143) ,