‘ஆசாகு’ என்பதனை இரங்கற்குறிப்புப்படுமொழி யென்பாரும் உளர். பெருவிறலையுடைய வயமான்சென்னியெனினுமாம். 1‘பொறிப்புண ருடம்பிற் றோன்றி’ என்பதற்குப் பாவைபோலும் வடிவுமாத்திரையே தோன்றித் தோன்றிய பயன்கொள்ளாமையால் என் அறிவுகெட நின்ற நல்கூர்மையென்றும், ‘விருந்துகண்டொளிக்கும்’ என்பதற்கும் வறுமைகண்டு, வந்தவிருந்து தாம் அது காணமாட்டாது ஒளிக்குமென்றும் உரைப்பாரும் உளர். மாறியென்பது மாறவெனத் திரிக்கப்பட்டது. (கு - ரை.) 1. ‘கெழு’ என்னுஞ் சாரியை, லகர னகரவீற்றுச் சொற்கள் ஒழிந்த பிறசொற்களிடத்து நிலைமொழி ஈற்றெழுத்துத் திரிய வந்ததற்கு மேள்கோள்; தொல். குற்றியலுகரப். சூ. 76, ந. 3. தனிக்குறிலையொழித்த லகரம் வல்லினம் வர அல்வழியில் திரிந்துவந்துததற்கு மேற்கோள்; நன். சூ. 228, மயிலை. 4. கதிர் - பொற்கொல்லர்களின் கருவி விசேடம்; புறநா. 249: 1. ‘நாகு’ என்பது நந்தின் பெண்பாற்கு வருதல் மரபென்பதற்கு மேற்கோள்; தொல். மரபு. சூ. 63, பேர். 8 - 10. கலித். 139: 33 - 7. 9. ஆசாகு: குறுந். 176: 5.13. 'அழிபசி வருத்தம் வீட” (சிறுபாண். 140) என்பதும், ‘அறிவு முதலியன அழிதற்குக் காரணமான பசியால் உளதாகிய வருத்தங்கள் விட்டுப் போம்படி’ என்னும் அதன் உரையும், 'அற்றா ரழிபசி தீர்த்தல்”, 'அறிவினை, நிச்ச நிரப்புக்கொன் றாங்கு”, 'தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக, நல்குர வென்னு நசை” (குறள், 226, 532, 1043) , 'குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும், பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம், நாணணி களையு மாணெழில் சிதைக்கும்.....................பசிப்பிணி யென்னும் பாவி” (மணி.11: 76- 80) , 'மானங் குலங்கல்வி வண்மை யறிவுடைமை, தானந் தவமுயற்சி தாளாண்மை - தேனின், கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும், பசிவந் திடப்போம் பறந்து” (நல்வழி, 26) என்பனவும் ஈண்டு உணரத்தக்கன. (266) 267 2........................................................(268) 2..........................................................
1 குறள், 410, பரிமேல். 2 இவ்வெண்களுக்குரிய பாட்டுக்கள், கிடைத்த கையெழுத்துப் பிரதிகளுள் ஒன்றிலும் காணப்படவில்லை.
|