| தணங்குடைமரபி னிருங்களந் தோறும் வெள்வாய்க்கழுதைப் புல்லினம் பூட்டி | | 10 | வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும் வைக லுழவ வாழிய பெரிதெனச் சென்றியா னின்றனெ னாக வன்றே ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை | | 15 | நுண்ணூற் கலிங்க முடீஇ யுண்மெனத் தேட்கடுப் பன்ன நாட்படு தேறல் கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ ஊண்முறை யீத்த லன்றியுங் கோண்முறை விருந்திறை நல்கி யோனே யந்தரத் | | 20 | தரும்பெற லமிழ்த மன்ன கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே. |
(பி - ம்.) 1. ‘உதியர்’ 6 ‘கடந்த’ 7 ‘குருதிபெரும்’ 8 ‘மார்பின’ 9 - 10 ‘பூட்டி.............வெள்ளை’ 11 ’வாழியபலவென’ 12 ’னின்ற னெனாதக’ 15 ‘யுண்ணென’ 17 ‘பொலங்கலத்தருள................விடுத்தல்’ 18 ‘ஊனமுறை’, ‘ஊழமுறை’ திணையும் துறையும் அவை. அதியமான் நெடுமானஞ்சிமகன் பொகுட்டெழினியை ஒளவையார். (கு - ரை.) 1. ஏர் - ஒப்பு ; “இலவம் போதே ரெழிற்றகைய சீறடிகள்” (சீவக. 1588) 2. கொடும்பூண் - வளைந்த ஆபரணம் ; “விளங்குமணிக் கொடும் பூண் விச்சிக் கோவே” (புறநா. 200 ; 8) 3. பசலைநிலவு - இளநிலவு. 5. கொடா - திறைகொடாத. 4 - 5. “பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண், இரும்பறை யிரவல” (புறநா. 263 : 1 - 2) 3 - 5. “இருணிலாக் கழிந்த பகல்செய் வைகறை, ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி” (புறநா. 394 : 6 - 7) 7. குருதிப்பெரும்பாட்டீரத்து - இரத்தப் பெருக்காலுளதாகிய ஈரத்தையுடைய. 8. களம் - தானியக்கதிரை அடிக்குங்களமும்போர்க்களமும்.
|