393 | பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக் குறுநெடுந் துணையொடு கூமை வீதலிற் குடிமுறை பாடி யொய்யென வருந்தி அடனசை மறந்தவெங் குழிசி மலர்க்கும் | | 5 | கடனறி யாளர் பிறநாட் டின்மையின் வள்ளன் மையினெம் வரைவோர் யாரென உள்ளிய வுள்ளமொ டுலைநசை துணையா ................கவக மெல்லா மொருபாற் பட்டென மலர்தா ரண்ணனி னல்லிசை யுள்ளி | | 10 | ஈர்ங்கை மறந்தவெ னிரும்பே ரொக்கல் கூர்ந்த வெவ்வம்விடக் கொழுநிணங் கிழிப்பக் கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த மூடைப் பண்ட மிடை நிறைந் தன்ன வெண்ணிண மூரி யருள நாளுற | | 15 | ஈன்ற வரவி னாவுருக் கடுக்குமென் தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப் போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன அகன்றுமடி கலிங்க முடீஇச் செல்வமும் கேடின்று நல்குமதி பெரும மாசில் | | 20 | மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி ஆடுமக ளல்கு லொப்ப வாடிக் கோடை யாயினுங் கோடி....... காவிரி புரக்கு நன்னாட்டுப் பொருந வாய்வாள் வளவன் வாழ்கெனப் | | 25 | பீடுகெழு நோன்றாள் பாடுகம் பலவே. |
(பி - ம்.) 6 ‘வளளனமெனவவரை’ 7 ‘டுறுநசை’ 10 ‘மறைந்த’ 11 ‘கூர்ந்தவேவம்வீட’ 12 ‘விடுநிறை’ 15 ‘ஈன்றவாவினாருககடுககும்’ 16 ‘தொனறுபடி’ 22 ‘கொடியாயினுங்’ 24 ‘வளருவன’ திணையும் துறையும் அவை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார்.
(கு - ரை.) 1. பழங்கண் - துன்பம். 2. துணை - மனைவி. 4. குழிசி - சமைத்தற்குரிய கலம். மலர்க்கும் - நிமிரச்செய்யும். 6. எம்வரைவோர் - எம்மை ஏற்றுக்கொள்வோர். 4 - 6. குழிசி மலர்க்குங் கடனறியாளர் - அரிசி முதலியன இல்லா மையாற் கவிழ்த்துவைக்கப்பட்டுள்ள கலத்தைச்சமைத்தற்
|