344
செந்நெ லுண்ட பைந்தோட்டு மஞ்ஞை
செறிவளை மகளி ரோப்பலிற் பறந்தெழுந்து
துறைநணி மருதத் திறுக்கு மூரொடு
நிறைசால் விழுப்பொரு டருத லொன்றோ
5புகைபடு கூரெரி பரப்பிப் பகைசெய்து
பண்பி லாண்மை தருத லொன்றோ
இரண்டினு ளொன்றா காமையோ வரிதே
காஞ்சிப் பனிமுறி யாரங் கண்ணி...............
கணிமே வந்தவ ளல்குலவ் வரியே.

(பி - ம்.) 2 ‘செற்றிவளை மகளிரோம்ப விற்பிறந் தெழுத்து’ 3 ‘துறைநளி’

திணையும் துறையும் அவை. (பி - ம். திணை - வாகை; துறை - மூதின்முல்லை)

.....................................................அடை நெடுங்கல்வியார்


(கு - ரை.) 1. மஞ்ஞை - மயில்.

2. ஓப்பலின் - ஓட்டுதலால்.

3. துறைநணிமருதம் - நீர்த்துறைக்கு அண்ணிதான மருதமரம் ; புறநா.154 ; 1, 243 : 6 - 7 ; "மருதிமிழ்ந் தோங்கிய பெருந்துறைத், ததைந்த காஞ்சி", "துறைநணி மருத மேறி" (பதிற்.23 : 18, 27 ; 6). இறுக்கும் - தங்கும்.

4 - 6. ஒன்றோ : எண்ணிடைச்சொல் ; புறநா.341 ; 12 - 5.

7. இரண்டனுள் ஒன்று ஆகும்.

8. காஞ்சிமுறி - காஞ்சித்தளிர்.

(344)