(கு - ரை.) 1. இரவமொடு - இரவந்தழையோடு.செரீஇ - செருகி. 2. மருப்பு - யாழின் உறுப்புக்களுள்ஒன்றாகிய கோடு. 3. மையிழுது இழுகி - மையிட்டு. 4. ஐயவி - வெண்சிறுகடுகு. ஆம்பல் -ஆம்பலங்குழல். 5. காஞ்சி - காஞ்சிப்பண். 6. நறை புகைஇ - நறுநாற்றமுள்ள அகில்முதலியவற்றைப் புகைத்து. 1 - 6. புறநா. 296 : 1 - 2. 5 - 8. “கொழுநர் மார்பின், நெடுவசிவிழுப்புண் டணிமார் காப்பென, வறல்வாழ் கூந்தற்கொடிச்சியர் பாடல்” (மலைபடு. 302 - 4) மு. “ஐயவி சிந்தி நறைபுகைத்தாய்மலர்தூய்க், கொய்யாக் குறிஞ்சி பலபாடி -மெய்யிணர்ப், பூப்பெய் தெரிய னெடுந்தகைபுண்யாங்காப்பப், பேய்ப்பெண் பெயரும் வரும்” (பு.வெ. 79) காஞ்சித் திணைத்துறைகளுள், ‘இன்னகைமனைவி பேஎய் புண்ணோற், றுன்னுதல் கடிந்த தொடாஅக்காஞ்சி’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 19, இளம்.; ந. (281)
|