(கு - ரை.) 1. கலிச்சிறகு - தழைத்தலையுடைய சிறை. 2. மயிலை - இருவாட்சி. 3. ஏனோர் மகள்கொல் - யாவருடைய மகளோ ? விதுப்புற்று - விரைந்து ; "கண்விதுப்பழிதல்" (குறள், அதி. 118) என்பதன் பொருளால் உணர்க.4. நெடுந்தகை : விளி. 5. நயத்தக்க - விரும்பத்தக்க. நலன் : எழுவாய். 6. பொருநர் - போர்வீரர். 7 - 8. கொக்கின்பிள்ளை மேய்ந்தபின். 9. ஆரல் - ஒருவகை மீன். ஐயவி - வெண்சிறுகடுகு. ஆரல்மீன் முட்டைக்கு ஐயவியுவமை.10, இறவு - இறாமீன். 11. தண்பணை - மருதநிலம். கிழவன் - உரியவன். 13. போர்பு - போர். களிறு எருதாக ; "படுபிணப் பல்போர் பழிய வாங்கி, எருதுகளி றாக வாண்மட லோச்சி" (புறநா.370 ; 15 - 6) 14. வாள்தக. 15. தன்னைமார் - தமையன்மார். (342)
|