306
களிறுபொரக் கலங்கு கழன்முள் வேலி
அரிதுண் கூவ லங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்த லொண்ணுத லரிவை
நடுகற் கைதொழுது பரவு மொடியாது
5விருந்தெதிர் பெறுகதில் யானே யென்னையும்
ஒ ........................................... வேந்தனொடு
நாடுதரு விழுப்பகை யெய்துக வெனவே.

(பி - ம்.) 1. ‘கலங்கிக்’, ‘கன்முன்’

திணை - அது; துறை - மூதின்முல்லை.

அள்ளூர்நன்முல்லையார்.


(கு - ரை.) 1. கழல் - கழற்கொடி.முள்வேலி : பெரும்பாண். 154, 184 - 5; முல்லை. 27.

2. கூவல் - கிணறு.

1 - 2. யானை உழக்குதலாற் கலங்கிய‘கூவல்; முள்ளையுடைய கழற்கொடியாலாகிய வேலியையுடையசீறூர்.

3. தழைத்த மெல்லிய கூந்தலையும்ஒள்ளிய நெற்றியையும் உடைய அரிவை; ஒலிமென் கூந்தல்”(புறநா. 146 : 9; குறுந். 225)

4. நடுகல்லைத் தொழுதல் மரபு; ‘’அடும்புகழ்பாடி யழுதழுது நோனா, திடும்பையுள் வைகிற் றிருந்த -கடும்பொடு, கைவண் குருசில் கற்கைதொழூஉச் செல்பாண,தெய்வமாய் நின்றான் றிசைக்கு” (பு. வெ. 252).பரவும் - துதிப்பாள். ஒடியாது - ஒழியாது; தவிராது.

5. யான் விருந்தைப் பெறுவேனாக;தில்: விழைவின்கண் வந்தது. என், ஐயும் - என்கணவனும்.

7. பகை எய்துக வென்று வேண்டியது, தன்கணவன்நிச்சயமாக வெல்லுவானென்று துணிந்து; புறநா. 172:11, உரை.
எனப் (7) பரவுமென்க (4)

இது கண்டோர் கூற்று.

(306)