(கு - ரை.) 1. வெருக்குவிடை -காட்டுப்பூனையின் ஆண். கயந்தலை - மெல்லிய தலை. வெருகினை விடையென்று கூறுவதற்கு இவ்வடிமேற்கோள்; தொல். மரபு. சூ. 68, பேர். 2. கயவாய் - மெல்லிய வாய். 2 - 3.கயவாய்மகார். 4. சிறிய இலைகளையுடைய உடைமரத்தின்உட்டுளையையுடைய வெள்ளிய முள்ளை; “உடையிலை நடுவணதிடைபிறர்க் கின்றித், தாமே யாண்ட” (புறநா.363 : 2 - 3) 5. ஊகநுண்கோல் - ஊகம்புல்லின்ஈர்க்கில். 4 - 5. உடைமுள்ளை ஊகங்கோலிற்கோத்த அம்பினை உடையராய். 6. வலார் - வளார்; மலாரென வழங்கும்.குலாவர - வளைய. 7. தொல். எச்ச. சூ. 17, ந. மேற். 3 - 7. “ஆர்நாரின் றிண்கயிற்றாலமைச்சிறுகோல் வளைத்தவில்லும், கூர்வாய்முண்ணுனிபதித்த கோற்கோலுங் கைக்கொண்டு, கார் மேனிமைந்தரொடு கான்புகுந்து கொடுவிலங்கின், ஏர்வாய்மென்குருளைபல வெய்தல்செய்தான் விளையாட்டால்” (சீகாளத்திப்.கண்ணப்ப. 29) என்பது இவ்வடிகளின் பொருளை ஒருவாறுதழுவி வந்திருத்தல் காண்க. 7 - 8. “பருத்தி வேலிச்சீறூர்” புறநா.299 : 1. 9. குமிழுண் வெள்ளை - குமிழம்பழத்தைஉண்ணும் வெள்ளாடு. 10. காழ் - கொட்டை. தாய - பரந்த.பந்தரின்கீழ். 11. இடையன் : புறநா. 331 : 4 - 5. பொத்திய- மூட்டிய. 12. நாண் - மானம். 14. உலக்கும் -இறக்கும். நெடுந்தகை (12) துணை (14) மு. வேந்தற்குத் துணையாகச்செல்வோரைக் கூறியதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 5, ந. (324)
|