298
எமக்கே கலங்க றருமே தானே
தேற லுண்ணு மன்னே நன்றும்
இன்னான் மன்ற வேந்தே யினியே
நேரா ராரெயின் முற்றி
5வாய்மடித் துரறிநீ முந்தென் னானே.

(பி - ம்.) 5 ‘துரறிய நீமுந்தெனவே’

திணை - கரந்தை; துறை - நெடுமொழி.

ஆலியார் (பி - ம். ஆனீயார், ஆவியார்)


(கு - ரை.) 1 - 2. கலங்கிய கள்ளைஎமக்கே கொடுப்பான்; தான் தெளிந்த கள்ளையுண்பான் முன்பு; என்றது, தலைவன் எம்மை மேலாக மதித்துமுன்பு இனியது செய்வானென்றபடி, ‘எமக்கு’ என்பது தன்போல்வாரையும் உளப்படுத்தி நின்றது. மன் : கழிவுப்பொருளது.

3. வேந்து இனி இன்னான் - வேந்தன்இப்பொழுது இன்னாதவனாயினான்; அதனைப் பின் கூறுவார்.

5. வாய்மடித்து : புறநா. 295 : 2.

4 - 5. பகைவருடைய மதிலைச் சூழ்ந்துஇதழைக் கவ்வி முழங்கிக் கொண்டு நீ முற்படுக வென்னானாகித்தான் முற்படுவான்; ஆதலால், இன்னானென்க.

(298)