(கு - ரை.) 1. “என்னு மெல்லையினன்றென வவுணர்கோனெழுந்து, தன்ன தாகியவுறையுள்போய்த் தடம்புன லாடி” (கந்த. சூரபன்மன்வதை16) 2. புறநா. 76 : 4. இவ்வடி ஏழாம் வேற்றுமைத்தொகைக்குமேற்கோள்; தொல். எச்ச. சூ. 17, ந. 3. தெண்கிணை : 78 : 12. சிறந்த ஆடவர்நடைக்குக் களிற்றின் நடை உவமை: “மங்கல மழகளிறனைய செல்கையன்” (சூளா. குமாரகால. 9); “பொன்னாகமு நாகமு நாண நடந்தான்” (கம்ப. கார்முக.32) (79)
1. யானைக்குமுன் பறைசெல்லுதல் மரபு: “வெரூஉப்பறைநுவலும் பரூஉப்பெருந் தடக்கை, வெருவரு செலவின் வெகுளிவேழம்” (பொருந. 171-2); “நிறையழி கொல்யானைநீர்க்குவிட் டாங்குப், பறையறைந் தல்லது செல்லற்க”(கலித். 56 : 32 - 3); “பாகும் பறையும் பருந்தின்பந்தரும், ஆதுல மாக்களு மலவுற்று விளிப்ப” (மணி.4 : 41 - 2); “பறைநிறை கொல்யானை”, “அறைபறையானை” (முத்தொள்ளாயிரம்) 2. “கடிக்கண்ணி வேந்தரை யாற்றுக் குடிக்கன்னிவாகைகொண்டே, முடிக்கண்ணி மேல்வைத்த மும்மதில்வேந்தன்” (பாண்டிக்கோவை); “காண்டுமிக்காளைதன் கன்னிப் போரெனா” (சூளா. அரசியல்.79); “காகுத்தன் கன்னிப் போரில்” (கம்ப.தாடகை. 77); “கன்னிவேட்டை மகன்போக” (பெரிய.கண்ணப்பர். 47); “மழவிடை கன்னி வேட்டம்வாய்த்துடன் வருக வென்றான்” (சீகாளத்திப்.கண்ணப்பச். 70); “கன்னிப்போர் செய்தருளி”(ஸ்ரீபராந்தகதேவர் மெய்க்கீர்த்தி). கன்னிப் போர்-முதற்போர்.
|